மல்லி விதை நீர் அளிக்கும் மகத்தான நன்மைகள்: முழு லிஸ்ட் இதோ

Coriander Seeds Water Benefits: ஆரோக்கியத்தை பேணிக்காக்க, சத்தான உணவுகளை டயட்டில் சேர்ப்பது மிக அவசியமாகும். மல்லி விதைகளால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 27, 2025, 10:24 AM IST
  • தினமும் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • இதை தொடர்ந்து பயன்படுத்துவதால், உடலுக்கு வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே கிடைக்கிறது.
  • இது உடலுக்கு தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட வலிமை அளிக்கிறது.
மல்லி விதை நீர் அளிக்கும் மகத்தான நன்மைகள்: முழு லிஸ்ட் இதோ

Coriander Seeds Water Benefits: நாம் நமது சமையலில் பயன்படுத்தும் பல மசாலாக்கள் நமது உணவுக்கு சுவையை சேர்ப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. ஆரோக்கியத்தை பேணிக்காக்க, சத்தான உணவுகளை டயட்டில் சேர்ப்பது மிக அவசியமாகும். குறிப்பாக காலையில் நாம் என்ன சாப்பிட்டாலும், குடித்தாலும் அது நம் உடல் ஆரோக்கியத்தில் சில குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

Add Zee News as a Preferred Source

பொதுவாக காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. வெறும் நீருக்கு பதிலாக மூலிகை நீரை குடிப்பதும் நன்மை பயக்கும். மூலிகை நீர் வகைகளில் தனியா தண்ணீர் அதாவது கொத்தமலி நீரும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. மல்லி விதைகள் அதன் நறுமணம் மற்றும் சுவை மூலம் கறி, சாம்பார், ரசம் என பல வகையான உணவுகளில் சுவையை அதிகரிக்கின்றது.

கொத்தமல்லியை நாம் இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். நாம் பச்சை கொத்தமல்லி இலைகளை  கொண்டு சட்னி செய்யலாம், ரசம், சாம்பார், சாலட் போன்ற பல உணவு வகைகளில் இதை சேர்க்கலாம்.. இது நம் உணவின் சுவையை அதிகரிக்கிறது. இரண்டாவது வழி மல்லி விதைகளைப் பயன்படுத்துவது. நாம் நமது உணவில் கொத்தமல்லி விதைகளை மசாலாப் பொருளாகச் சேர்க்கிறோம். இந்த இரண்டு வழிகளிலும் கொத்தமல்லியை உட்கொள்வது நல்ல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. 

கொத்தமல்லி விதை நீரின் நன்மைகள்

- கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். 

- கொத்தமல்லி உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படும். 

- இது ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலை குளிர்விக்கிறது.

- கொத்தமல்லி நீர் உடல் பருமன் பிரச்சனையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

- இது தைராய்டு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.

- உடலில் உள்ள கனத்தை நீக்குவதற்கும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் இது உதவுகிறது.

- கொத்தமல்லி நீர் தோல் தொடர்பான பிரச்சினைகளை மேம்படுத்துவதிலும், நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.

- இயற்கையான நச்சு நீக்கியான இந்த நீர், உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது.

- வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கொத்தமல்லி நீர், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

- இது செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாத்து இள வயதிலேயே வரும் வயோதிக அறிகுறிகளை தடுக்கிறது.

- தினமும் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

- இதை தொடர்ந்து பயன்படுத்துவதால், உடலுக்கு வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே கிடைக்கிறது.

- இது தவிர, இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன.

- இது உடலுக்கு தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட வலிமை அளிக்கிறது.

- கொத்தமல்லியில் உள்ள சினியோல் மற்றும் லினோலிக் அமிலம் போன்ற அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் செரிமான அமைப்பின் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

கொத்தமல்லி தண்ணீர் எப்படி செய்வது

- கொத்தமல்லி தண்ணீரை தயாரிப்பது மிகவும் எளிது.
- இதை செய்ய, ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை எடுத்து இரண்டு கப் தண்ணீரில் போடவும்.
- சுமார் 5 நிமிடங்கள் இதை கொதிக்க வைக்கவும்.
- இதற்குப் பிறகு, தண்ணீரை குளிர்விக்க விடவும்.
- இப்படி தயார் செய்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பெற்றோர்கள் கவனத்திற்கு! இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்!

மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை எல்லாம் பிட் ஆக இருக்க... தினம் ஒரு கப் மாதுளை போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News