Benefits of Nuts and Seeds: நமது உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் உட்கொள்ளும் உணவு மிக அவசியமாகும். உடலுக்கு உட்டச்சத்துகளை அளித்து நமது உடலில் ஆற்றலையும் மேம்படுத்தும் பிரத்யேக உணவுகள் உள்ளன. அவற்றில் கொட்டைகள் மற்றும் விதைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.
கொட்டைகள், விதைகள் மற்றும் உலர் பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். விதைகள் மற்றும் கொட்டைகளை தண்ணீரில் ஊறவைத்து காலை உணவில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு அதீத நன்மை பயக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆண்டிஆக்சிடெண்டுகள், அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் விதைகள் மற்றும் கொட்டைகளில் உள்ளன. காலை உணவில் கொட்டைகள் மற்றும் விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்பு
எடை இழக்க விரும்பும் நபர்கள், காலை உணவில் விதைகள் மற்றும் கொட்டைகளைச் சேர்க்கலாம். விதைகள் மற்றும் கொட்டைகளில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அவை பசியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் பசி குறைகின்றது. இதன் மூலம் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இதனால் எடையை விரைவாகக் குறைக்க முடிகின்றது. கொட்டைகள் மற்றும் விதைகளை சாப்பிடுவது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்கச்செய்யும்.
செரிமான அமைப்பு
செரிமான அமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பல வகையான நோய்களைத் தவிர்க்கலாம். செரிமான அமைப்பை வலுப்படுத்த, காலையில் காலை உணவில் விதைகள் மற்றும் கொட்டைகளை உட்கொள்ள வேண்டும். விதைகள் மற்றும் கொட்டைகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. செரிமான அமைப்பை வலுப்படுத்த, உங்கள் உணவில் விதைகள் மற்றும் கொட்டைகளைச் சேர்ப்பது மிக அவசியம். செரிமான அமைப்பை வலுப்படுத்த, சியா விதைகள், ஆளி விதைகளை உட்கொள்ளது நல்ல விளைவுகளை அளிக்கும்.
கொலஸ்ட்ரால்
கொட்டைகள் மற்றும் விதைகள் LDL கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவும். நல்ல கொழுப்பான HDL கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் இவை உதவும். இவற்றின் மூலம் கரோனரி இதய நோய்களையும் குறைக்கலாம்.
கொட்டைகள் மற்றும் விதைகளை எவ்வளவு நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்?
விதைகள் மற்றும் கொட்டைகளை தண்ணீரில் ஊற வைத்து உட்கொளவது சிறந்தது. விதைகள் மற்றும் கொட்டைகளை 7 முதல் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கலாம். விதைகள் மற்றும் கொட்டைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அவற்றை உட்கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் கொட்டைகள் மற்றும் விதைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எகிறும் பிபியை அசால்டாக கட்டுப்படுத்தும்... சில சூப்பர் உணவுகள்
மேலும் படிக்க | 22 கிலோவை குறைத்த 2 குழந்தைகளின் தாய்... உடல் எடையை குறைத்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









