முளைகட்டிய வெந்தயம்: வியக்கவைக்கும் நன்மைகள், பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

Benefits Of Eating Sprouted Fenugreek: தினசரி உணவில் சில குறிப்பிட்ட விஷயங்களை சேர்ப்பதால் பல கடுமையான நோய்களைத் தவிர்க்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றில் முளைகட்டிய வெந்தயமும் ஒன்று.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2025, 01:43 PM IST
  • முளைகட்டிய வெந்தயத்தை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
  • வெந்தயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • வெந்தயம் இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது.
முளைகட்டிய வெந்தயம்: வியக்கவைக்கும் நன்மைகள், பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

Benefits Of Eating Sprouted Fenugreek: நமது சமயலறையில் நாம் பயன்படுத்தும் பல வித மசாலாக்கள் நமது உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட ஆரோக்கியமான மசாலாக்களில் வெந்தயமும் ஒன்று.

Add Zee News as a Preferred Source

முளைகட்டிய வெந்தயம்

தினசரி உணவில் சில குறிப்பிட்ட விஷயங்களை சேர்ப்பதால் பல கடுமையான நோய்களைத் தவிர்க்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றில் முளைகட்டிய வெந்தயமும் ஒன்று. வெந்தயத்தை உட்கொள்வதால், உடலுக்கு வைட்டமின் சி, புரதச்சத்து, நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இந்த ஊட்டச்சத்துகளின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களைத் தடுக்க விரும்பினால், முளைத்த வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

- முளைகட்டிய வெந்தயத்தை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

- வெந்தயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

- வெந்தயம் இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது.

- முளை கட்டிய வெந்தயம் மூட்டுகளுக்கு நன்மை பயக்கும்.

- வெந்தயத்தை உட்கொள்வதால் தொப்பை கொழுப்பை குறைக்கலாம்.

- வெந்தயம் சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கும்.

- ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் கீல்வாதம் போன்ற எலும்பு நோய்களைத் தடுப்பதில் வெந்தய விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- முளைத்த வெந்தயத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 

முளை கட்டிய வெந்தயத்தை எப்படி உட்கொள்ள வேண்டும்?

காலையில் வெறும் வயிற்றில் முளைத்த வெந்தயத்தை சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும். முளை கட்டிய வெந்தயத்தை அப்படியே உட்கொள்ளலாம், அல்லது சாலட்டில் சேர்த்து உட்கொள்ளலாம். மேலும், முளைத்த வெந்தயத்தின் சுவையை அதிகரிக்க எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.  முளைத்த வெந்தயத்தை கறி, குழம்பு மற்றும் சூப்பில் சேர்த்தும் உட்கொள்ளலாம். கூந்தலுக்கு இதைப் பயன்படுத்த விரும்பினால், முளைத்த வெந்தயத்தை அரைத்து, முடி மாஸ்க் போல தலைமுடியில் தடவிக்கொள்ளலாம். 

இவற்றில் கவனம் தேவை

சிலருக்கு வெந்தயத்தால் ஒவ்வாமை ஏற்படலாம். ஆயுர்வேதத்தின் படி, வெந்தயத்தின் தன்மை காரத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெந்தய நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் வெந்தயத்தை உட்கொள்வதால இரத்த சர்க்கரை அளவு மிக குறைய வாய்ப்புள்ளது. இது ஆபத்தாகலாம். ஆகையால் நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது சர்க்கரை அளவை பரிசோதித்து பார்ப்பது நல்லது. வெந்தய நீர் சில குழந்தைகளுக்கு நினைவாற்றல் மற்றும் கவனச் சிதறலுக்கு காரணமாகலாம். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 9 கிலோ எடையை சட்டுனு குறைத்த பெண்... கொழுப்பை கரைக்க 7 முக்கிய விஷயங்கள்!

மேலும் படிக்க | அமைதியாய் இருந்து ஆட்டம்காட்டும் கொலஸ்ட்ரால்: 18 வயதுக்கு மேல் பரிசோதனை அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News