தர்பூசணி விதைகளில் ஒளிந்துள்ளன ஏகப்பட்ட நன்மைகள்: நீரிழிவு, நினைவாற்றல், வளர்சிதை மாற்றம்.. இன்னும் பல

Diabetes Control Tips: தர்பூசணி விதைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றின் பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 12, 2025, 05:09 PM IST
  • குணங்களின் களஞ்சியமாக உள்ள தர்பூசணி விதைகள்
  • தர்பூசணி விதைகளின் நன்மைகள் என்ன?
  • தர்பூசணி விதைகளை எப்படி உட்கொள்வது?
தர்பூசணி விதைகளில் ஒளிந்துள்ளன ஏகப்பட்ட நன்மைகள்: நீரிழிவு, நினைவாற்றல், வளர்சிதை மாற்றம்.. இன்னும் பல

Watermelon Seeds for Diabetes Control: கொளுத்தும் வெயிலிலும், கடுமையான வெப்பத்திலும், உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து நீர் பற்றாக்குறையைத் தவிர்க்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அவற்றில் ஒன்று தர்பூசணி. கோடை காலத்தில் அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் தர்பூசணியின் விதைகளை நீக்கி, பழத்தை மட்டும் உட்கொண்டு விதைகளை தூக்கி எறிந்து விடுவார்கள்.

Add Zee News as a Preferred Source

தர்பூசணி விதைகள்

ஆனால், அதில் உள்ள பண்புகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி பலருக்குத் தெரிவதில்லை. இது பற்றிய புரிதல் இருந்தால், யாரும் விதைகளை தவிர்க்க மாட்டார்கள். தர்பூசணி விதைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றின் பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

குணங்களின் களஞ்சியமாக உள்ள தர்பூசணி விதைகள்

தர்பூசணி விதைகளில் துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இது மட்டுமல்லாமல், அவற்றில் கலோரிகளின் அளவுகளும் மிக குறைவாக உள்ளன. இது நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கு நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விதைகளில் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் (லினோலிக் அமிலம் மற்றும் ஒலிக் அமிலம்) உள்ளதாக நிபுணர்களின் கூறுகின்றனர். இது சருமத்தை இளமையாக மாற்ற உதவுகிறது.

இதில் உள்ள லைகோபீன் ஒரு வலுவான ஆண்டிஆக்சிடெண்டாகும். இது ஆண்களின் ஆண்மைத் தன்மையை அதிகரித்து கருவுறுதலில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யும் என்ன ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

தர்பூசணி விதைகளின் பிற நன்மைகள் என்ன?

நினைவாற்றல் பலவீனமாக உள்ளவர்களுக்கும், நினைவாற்றல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் தர்பூசணி விதைகள் உதவும். இது தவிர, இது ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கு பங்களிக்கும். மேலும் இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறன. இது சருமத்தை பல வருடங்கள் இளமையாக வைக்க உதவுகிறது. மேலும், இது எலும்புகளை வலுப்படுத்துவதோடு, செரிமான சக்தியை அதிகரிக்கவும் உதவும். இருப்பினும், அதை குறைந்த அளவிலும் சரியான முறையிலும் உட்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பூசணி விதைகளை எப்படி உட்கொள்வது?

பல நிபுணர்கள் தர்பூசணி விதைகளை உலர்த்தியோ அல்லது வறுத்தோ சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இந்த விதைகளை சாப்பிடுவதற்கான சிறந்த வழி அவற்றை வறுத்தெடுப்பதுதான் என்று நம்புகிறார்கள். இதைச் செய்வதன் மூலம், விதைகளின் முழு நன்மைகளையும் பெற முடியும் என கூறப்படுகின்றது. மேலும் இந்த வழியில் சுவை அதிகமாக மாறாது என நம்பப்படுகின்றது. ஆனால் இதை முயற்சிக்கும் முன், முதலில் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனெனில் இந்த விதைகள் சிலருக்கு தீங்கு விளைவிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சாப்பாட்டில் கவனமாக இருந்து... 12 வாரங்களில் கொழுப்பை குறைத்த பெண்!

மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் காலி செய்யும் டாப் 9 உணவுகள்: லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News