Best Summer Drinks: கொளுத்தும் கோடை வெயிலில் உடலை குளிர்ச்சியாகவும், நீர் சத்து குறையாமலும் பராமரிப்பதில், நாம் உட்கொள்ளும் உணவுகளுக்கும் பானங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. கோடையில் உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கக்கூடிய, கூலாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். கோடை வெயிலை சமாளிக்க தண்ணீர் குடிப்பது மட்டும் போதாது. அதோடு, உடலுக்கு ஆற்றலை வழங்கும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த ஆரோக்கியமான பானங்கள் மற்றும் பழச்சாறுகள் அவசியம்
வெயிலை சமாளிக்க நாம் அருந்தும் பானங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உதவுகின்றன. கோடைக்கான சில பிரத்யேக பானங்கள் ஜூஸ்கள் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல் ஆற்றலையும் அள்ளித் தருகிறது. இந்த கடுமையான வெப்பத்தில் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் சில பானங்களை அறிந்து (Health Tips) கொள்ளலாம்.
கோடை வெயிலை கூலாக சமாளிக்க உதவும் சில பானங்கள்
மோர்
கோடை கால பானங்களில் முதலிடம் மோருக்குத் தான். மோருக்கும இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சித்தன்மை கொடுக்கக் கூடியது. உடலை கடுமையான வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாக்கும் அருமருந்தாக இருக்கும். ப்ரோபயோடிக் தன்மை கொண்ட மோர் செரிமானம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கோடை காலத்தில் கருவேப்பிலை, புதியா, கொத்துமல்லி சேர்த்த மோர் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
தர்பூசணி ஜூஸ்
தர்பூசணியில் தோராயமாக 92% நீர்சத்து உள்ளது, இது கோடையில் உடலுக்கு நீர்சத்தை அள்ளி வழங்கும் சிறந்த பழமாக அமைகிறது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை டீடாக்ஸ் செய்வதோது மட்டுமல்லாமல், உடலில் நீர் சத்து குறையாமல் பராமரிக்கிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் சருமத்தை பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். தர்பூசணி துண்டுகளை மிக்ஸியில் போட்டு, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளை சேர்த்து கலக்கினால் அற்புதமான கூல் ஜூஸ் தயார்.
வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காயில் இயற்கையாக உடலை குளிர்விக்கும் சத்துடன் நீர்ச்சத்து உள்ளது. இதில் 96% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை ஜூஸாக அருந்தலாம் வெள்ளரிக்காயில் மிகக் குறைவான கலோரிகளே உள்ளன. வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி அதில், புதினா இலைகள், உப்பு, சேர்த்து அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
தேவைப்பட்டால், கூடுதலாக தண்ணீர் சேர்த்து கலந்து குடிக்கலாம். உடலை குளிர்விக்கும் அற்புத பானம் இது. வெள்ளரிக்காய் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து நீரிழப்பு தடுக்கிறது. எடை குறைக்கவும் உதவுகிறது மற்றும் செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது.
இளநீர்
கோடையில் குளிர்ச்சியை தரும் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானங்களில் ஒன்று தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர். இதில் எலக்ட்ரோலைட்டுகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது ஒரு சிறந்த எனர்ஜி பூஸ்டர் பானம். இது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஹீட் ஸ்ட்ரோக் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
வெள்ளரி சாறு
வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து நிறைந்துள்ளது, இது உடலின் நச்சுத்தன்மையை நீக்கி குளிர்ச்சியைத் தருகிறது. அதே நேரத்தில், புதினா ஒரு இயற்கையான குளிரூட்டும் முகவராக செயல்படுகிறது, இது உடலை உள்ளே இருந்து குளிர்விக்கும். வெள்ளரிக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கி, புதினா இலைகள், எலுமிச்சை சாறு மற்றும் சிறிது கருப்பு உப்பு சேர்த்து கலக்கவும். வடிகட்டி ஆறவைத்து குடிக்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 40+ வயதாகிவிட்டதா... மூட்டு வலி பிரச்சனை வராமல் இருக்க உணவில் சேர்க்க வேண்டியவை
மேலும் படிக்க | வீட்டில் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டே 37 கிலோவை குறைத்த பெண் - எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









