பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் நார்ச்சத்துக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். எனவே, பழங்களை கட்டாயம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பழங்களை உட்கொள்வது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. அதிலும் சில பழங்களின் தோல்களை நீக்காமல் சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும். பழங்களுக்கு இணையான ஊட்டச்சத்துக்கள் இவற்றில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். சில பழங்களில் தோல்கள் ஊட்டச்சத்தின் பொக்கிஷமாக உள்ள நிலையில், அதனை நீக்காமல் அப்படியே சாப்பிடுவதால், முழுமையான ஊட்டச்சத்தினை பெறலாம்.
ஆப்பிள் (Apple)
சிலருக்கு ஆப்பிளின் தோலை சாப்பிட பிடிக்காது. அதனால், ஆப்பிளை அதன் தோலை நீக்கி சாப்பிடுவார்கள். ஆப்பிளில் மட்டுமின்றி அதன் தோலிலும் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து மட்டுமல்லாது, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆப்பிள் கிட்டத்தட்ட அனைத்து வகையான நோய் பாதிப்பிலும், சாப்பிடுவதற்கு மிகவும் பாதுப்பான பழமாக கருதப்படுகிறது. ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த, நீரழிவு நோயாளிகள் தோலை நீக்காத ஆப்பிளை தினமும் சாப்பிட வேண்டும்.
பேரிக்காய் (Pear)
பேரிக்காயின் தோலிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து செரிமான அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் பேரிக்காய் தோலை நீக்கி கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. பேரிக்காய் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேரீச்சம்பழத்தின் தோலை நீக்கிய பின் சாப்பிட்டால், இன்றிலிருந்து அதைச் செய்வதை நிறுத்துங்கள். பேரிக்காய் தோலுடன் சாப்பிட வேண்டும்.
கொய்யா (Guava)
நீரிழிவு நோயாளிக்கு கொய்யாப்பழம் மிகவும் அற்புதமான தேர்வாக இருக்கும். கொய்யாவை அதன் தோலை நீக்கிய பின் சாப்பிடுவதால், பல சத்துக்களை இழந்து விடுவோம். கொய்யாத் தோலில் நார்ச்சத்து இருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் அருமையான பழம் இது. செரிமானத்திற்கு சிறந்த பழம். மலசிக்கல் உள்ளிட்ட ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு குட்பை சொல்ல பெரிதளவு உதவும்.
சப்போட்டா (Sapota)
பெரும்பாலானோர் சப்போட்டாவை, அதன சுவையை நன்றாக அனுபவிக்க தோலுரித்து சாப்பிடவே விரும்புவார்கள். ஆனால், சப்போட்டா தோல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. சப்போட்டா தோலில் பொட்டாசியம், இரும்பு, ஃபோலேட் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலத்தின் முக்கிய ஆதாரமாகும். இந்த பழத்தின் தோலில் அதிக அளவு வைட்டமின்களும் உள்ளன. சப்போட்டா தோல்கள் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். எனவே, சப்போடா தோல் பல நோய்களுக்கு தீர்வாக அமையும்.
கிவி (Kiwi)
கிவி மிகவும் ஆரோக்கியமான பழம். கிவி தோலில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கிவியின் தோல் சிறிது கடினமாக இருக்கும் என்பதோடும, சுவையும் நன்றாக இருக்காது என்பதால், பலர் அதை சாப்பிடாமல் தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால், அதன் தோலில் வைட்டமின்கள் மற்றும் பல தாதுக்கள் நிறைந்து உள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை எல்லாம் பிட் ஆக இருக்க... தினம் ஒரு கப் மாதுளை போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









