)
Benefits of Coriander Seeds: நாம் நமது தினசரி சமையலில் பயன்படுத்தும் பல வித மசாலாக்கள் நமது உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. ஆரொக்கியத்தின் பொக்கிஷமாக இருக்கும் மசலாக்களில் தனியாவும் ஒன்றாகும். தனியா அதாவது கொத்தமல்லி விதைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் பல ஊட்டச்சத்துக்களும் இதில் காணப்படுகின்றன. இது நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
மல்லி விதை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
Digestion: செரிமானம்
தினமும் காலையில் கொத்தமல்லி விதை தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. இது வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
Weight Loss: எடை இழப்பு
உடல் எடையை இழக்க விரும்பும் நபர்களுக்கு இந்த நீர் ஒரு சஞ்சீவியாக இருக்கும். இதில் உள்ள கலோரி அளவு மிக குறைவு. தனியா தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு வேகமாக குறைகிறது.
Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
கொத்தமல்லி நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும். இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் மல்லி விதைகளை பயன்படுத்த, இரவில் ஒரு கைப்பிடி விதைகளை தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் விதைகளை வடிகட்டி அந்த தண்ணீரை குடிக்கலாம்.
Skin Care: சருமத்திற்கு நன்மை பயக்கும்
கொத்தமல்லி நீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்கள் சருமத்தை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி சரும பாதுகாப்பை உறுதி செய்கின்றது.
Immunity: நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது
கொத்தமல்லி நீர் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. கொத்தமல்லி நீர் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை இயற்கையான மற்றும் மலிவான வழியில் மேம்படுத்தும். இதை நாம் நமது தினசரி உணவில் சேர்ப்பதால் பல நோய்களைத் தவிர்க்கலாம்.
Cough and Cold: சளி, இருமலில் தீர்வு கிடைக்கும்
மல்லி நீர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு எதிராகவும் போராட உதவுகிறது. கொத்தமல்லியில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகின்றன. இது வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலை காக்கின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ