ஏலக்காயில் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்: சாப்பிடும் சரியான வழி இதோ

Benefits of Cardamom: ஏலக்காயின் நன்மைகள் என்ன? அதை எப்படி உட்கொள்வது? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2025, 07:41 PM IST
  • ஏலக்காயில் காணப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
  • ஏல்லக்காய் உட்கொள்வது வலுவான இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றது.
  • தொற்றுநோய்களைத் தடுக்கவும் ஏலக்காயை உட்கொள்ளலாம்.
ஏலக்காயில் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்: சாப்பிடும் சரியான வழி இதோ

Benefits of Cardamom: நாம் நமது சமையலில் பயன்படுத்தும் மசாலாக்கள் பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. இவை உணவின் சுவையை அதிகரிப்பதோடு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. சுவையுடன் உடலுக்கு ஊட்டச்சத்துகளையும் அளிக்கும் மசாலாக்களில் ஏலக்காயும் ஒன்று. 

Add Zee News as a Preferred Source

ஏலக்காய், தேநீர், இனிப்பு வகைகள், பானகம், பிரியாணி போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றது. இது இந்த உணவு வகைகளின் சுவையை கூட்டுவதோடு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது. ஏலக்காய் பல ஆண்டுகளாக பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 

பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள ஏலக்காயை சரியான முறையில் உட்கொண்டால் வாய் துர்நாற்றம் முதல் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் வரையிலான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஏலக்காயின் நன்மைகள் என்ன? அதை எப்படி உட்கொள்வது? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

ஏலக்காயை எப்படி உட்கொள்வது?

ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று ஏலக்காய்களை உட்கொள்வது நன்மை பயக்கும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதை விட அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். ஆகையால் நாம் உட்கொள்ளும் ஏலக்காயின் அளவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும்.

ஏலக்காயை மென்று சாப்பிடலாம். மேலும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஏலக்காயை உட்கொள்வது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது தவிர, ஏலக்காய் தண்ணீரை அன்றாட டயட்டின் ஒரு பகுதியாகவும் சேர்த்துக் கொள்ளலாம். இதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

ஏலக்காய் உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன

ஏலக்காயில் காணப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் ஏல்லக்காய் உட்கொள்வது வலுவான இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றது. இது தவிர, தொண்டை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் ஏலக்காயை உட்கொள்ளலாம்.

தொற்றுநோய்களைத் தடுக்கவும் ஏலக்காயை உட்கொள்ளலாம். ஏலக்காயில் உள்ள தனிமங்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவும்.

இந்த பிரசனைகளிலும் தீர்வு கிடைக்கும்

இது தவிர, வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மை போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெறவும் ஏலக்காயை உட்கொள்ளலாம். இதுமட்டுமின்றி, துர்நாற்றம் மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஏலக்காய் மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, இரத்த அழுத்தத்தால் பாதிக்கபட்டுள்ள நபர்களும் ஏலக்க்காய் உட்கொள்ளலாம். ஏனெனில், ஏலக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 7 மாதங்களில் 40 கிலோ எடை குறைந்தது எப்படி? சீக்ரட் பகிரும் பெண்!

மேலும் படிக்க | சிறுநீரில் அதிக நுரை, மஞ்சள் கலர் தென்படுகிறதா? உஷார் மக்களே - இதுதான் காரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News