Major Causes of Kidney Damage: உடலின் சீரான செயல்பாட்டிற்கு அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும். உடலில் பல இன்றியமையாத பணிகளை செய்யும் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்ற சிறுநீரகம் செயல்படுகிறது.
சிறுநீரகம் உடலில் நீர், உப்புகள் மற்றும் தாதுக்களின் சமநிலையை பராமரிக்கிறது. ஒருவரின் சிறுநீரகங்கள் பல காரணங்களால் சேதமடையலாம். சிறுநீரகம் சேதமடைந்தால், அதன் காரணமாக உடலில் சோர்வும், பலவீனமும் தோன்றும். இது தசை பலவீனம் மற்றும் எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
சிறுநீரகங்களை மிக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். பல ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளால் சிறுநீரகங்கள் பாதிப்படையலாம்.. சிறுநீரகங்கள் பாதிப்படைய முக்கிய 5 காரணங்கள் பற்றி இங்கே காணலாம்.
உங்களுடைய இந்த 5 பழக்கவழக்கங்கள் உங்கள் சிறுநீரகத்தை சேதப்படுத்தும்
Pain Killers: அதிக வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது
பெரும்பாலும் மக்கள் உடல் வலி ஏற்படும் போது வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதிக அளவில் வலி நிவாரணிகளை உட்கொள்வது உங்களுக்கு நல்லதல்ல. அதிக நேரம் வலி நிவாரணிகளை உட்கொள்வது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இது சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது.
Water: போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது
உடலை நீரேற்றமாக வைத்திருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் தண்ணீர் இல்லாததால், சிறுநீர் கெட்டியாகி, சிறுநீரக கற்கள் மற்றும் தொற்று ஏற்படலாம். தினமும் 8 கிளாஸ் தண்ணீர் வரை குடிக்க வேண்டும்.
Alcohol, Drugs, Smoking: போதைப் பழக்கம்
மது அருந்துதல், போதைப் பழக்கம் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மதுபானம் உடலில் நீரிழப்பை ஏற்படுத்துகின்றது. மது அருந்துவதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படும்.
Sleep: தூக்கமின்மை
ஆரோக்கியமாக இருக்க, ஒருவர் இரவில் 7-8 மணிநேரம் தூங்க வேண்டும். போதுமான தூக்கம் இல்லை என்றால், அது உங்கள் சிறுநீரகங்களைப் பாதிக்கும். இரவில் 8 மணிநேர தூக்கம் மிக அவசியமாகும்.
Obesity: அதிகப்படியான உடல் பருமன்
அதிக எடை இருப்பது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி அல்ல. மாறாக அது நோய்களை வரவழைக்கிறது. உடல் பருமன் காரணமாக சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம். இது தவிர, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை எரிக்க... தொப்பையை கரைக்க... தினமும் தக்காளி ஜூஸ் தவறாம குடிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









