Symptoms of Diabetes: மக்களை அதிகமாக பாதிக்கும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முக்கியமனதாக கருதப்படுகின்றது. நீரிழிவு என்பது உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறனைப் பாதிக்கும் ஒரு நோயாகும். சர்க்கரை அளவு அதிகமாக அதிகரித்தால், அது உடலின் பல்வேறு பாகங்களைப் பாதிக்கிறது. சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் தாகம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
எனினும், இது தவிர, உடலில் இரத்த சர்கரை அளவு அதிகமாகும் போது, உடல் பாகங்கள் அதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகளையும் நமக்கு அளிக்கின்றன. குறிப்பாக கைகளிலும் கால்களிலும் சில அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன. இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது கைகளிலும் கால்களிலும் தோன்றும் அறிகுறிககள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வறண்ட சருமம்
உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் நீர்ச்சத்து குறைகிறது. இதனால் சருமம் வறண்டு போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது உங்கள் கைகள் மற்றும் கால்களில் தோல் உரிவதற்கும், சருமம் மென்மை தன்மையை இழப்பதற்கும் வழிவகுக்கின்றது. இது விரல்கள் அல்லது கணுக்கால்களைச் சுற்றி அதிகமாக நிகழ்கிறது.
உணர்வின்மை
நீரிழிவு நோயால், இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக அதிகரிக்கிறது. இது நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இது நியூரோபதி என்று அழைக்கப்படுகிறது. இதில், கை, கால்களில் உணர்வின்மை, எரிச்சல் மற்றும் கூச்ச உணர்வு ஏற்படும்.
சென்சிடிவிட்டி
நீரிழிவு நோயாளிகளுக்கு தோல் உணர்திறன் பிரச்சினைகள் இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் கைகள் மற்றும் கால்களின் நரம்புகள் அதிக உணர்திறன் கொண்டதாக மாறத் தொடங்குகின்றன. சில நேரங்களில் யாராவது அவற்றைத் தொடும்போது, தோலில் அழுத்தம் ஏற்படும். இது வலியையோ அல்லது நீல நிறக் குறிகளையோ கூட ஏற்படுத்தும்.
தொற்று
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் பெரும்பாலும் கைகள் மற்றும் கால்களில் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். அதிக சர்க்கரை காரணமாக, காயங்களை சீக்கிரம் ஆறாமல் இருக்கும். இந்தப் பகுதிகளில் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தடிமனான தோல்
உடலில் சர்க்கரை அளவு அதிகமானால், கால்களின் தோல் தடிமனாக மாறத் தொடங்குகிறது. பலரின் கைகளின் தோலும் தடிமனாகவும் கடினமாகவும் மாறும். இதுவும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
நீரிழிவு நோயின் பிற அறிகுறிகள்
கண் பார்வை
நீரிழிவு நோயால் கண்களின் லென்ஸ் மற்றும் விழித்திரை பாதிகப்படுகின்றது. இதன் காரணமாக பார்வை மங்கலாகக்கூடும். இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், கண்களில் அடிக்கடி எரியும் உணர்வும் ஏற்படலாம். கண்களில் நீர் வருதல், மங்கலான பார்வை, கண்களில் எரிச்சல் ஆகியவை அனைத்தும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலலாம்.
சிறுநீரக பிரச்சனை
இரத்த சர்க்கரை அளவு அதிகமானால் சிறுநீரகத்திலும் அதற்கான அறிகுறிகள் தோன்றும். சிறுநீரில் நுரை வருவது, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழித்தல் ஆகியவை சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கக்கூடும். பாதங்கள் மற்றும் கணுக்கால் வீக்கம் ஆகியவையும் சிறுநீரக பிரச்சனையின் அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன. நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரகம் அதிக வேலை செய்தாலோ, வேலையே செய்யாமல் இருந்தாலோ உடலில் சோர்வு மற்றும் பலவீனமான உணர்வு ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ரத்தப்புற்றுநோய் : இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காதீர்கள்..!
மேலும் படிக்க | 36 வயதில் 37 கிலோவை குறைத்த பெண்; கொழுப்பை கரைக்க செய்தவை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









