Benefits of Pumpkin Seeds: சிவப்பு பூசணி பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ள ஒரு காய். இதை சமைக்கும்போது நாம் பெரும்பாலும், அதன் விதைகளை தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆனால் இந்த சிறிய விதைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பலருக்குத் தெரிவதில்லை. இந்த சிறு பூசணி விதைகளில் நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை செய்யும் பல சத்துக்கள் மறைந்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூசணி விதைகள் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் வளமான மூலமாக உள்ளன. பூசணி விதைகளில் உள்ள அற்புதமான நன்மைகள் மற்றும் அவற்றை பாயன்படுத்தும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.


பூசணி விதைகளின் நன்மைகள்


மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள்


- பூசணி விதையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 
- இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
- இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.


நார்ச்சத்து 


- பூசணி விதையில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 
- இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளித்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றது.


துத்தநாகம் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள்


- பூசணி விதைகளில் துத்தநாகம் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன.
- இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. 
- இது உடலில் தொற்றுகளை சிறப்பாக எதிர்த்துப் போராட உதவும்.


மெக்னீசியம்


- பூசணி விதைகளில் மெக்னீசியம் உள்ளது.
- இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. 
- இது நினைவாற்றலை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும்.


மேலும் படிக்க | Dinner Tips: இரவு உணவில் இவை மட்டும் வேண்டவே வேண்டாம்... கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும்


டிரிப்டோபான்


- பூசணி விதைகளில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது.
- இது உடலில் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். 
- செரோடோனின் என்பது ஒரு நரம்பியக்கடத்தி ஆகும்.
- இது தூக்கத்தைக் கட்டுப்படுத்தும்.


வைட்டமின் ஈ 


- பூசணி விதையில் வைட்டமின் ஈ இருப்பதால் இதை உட்கொள்வதன் மூலம் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
- இது சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
- கூந்தலை வலுவாக்கும்.


பூசணி விதைகளை எப்படி உட்கொள்வது?


- பூசணி விதைகளை சிறிது உப்பு, மிளகுத்தூள் அல்லது பிற விருப்பமான மசாலாப் பொருட்களுடன் வறுத்து சுவையான சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
- சாலட் அல்லது தயிரில் போட்டும் சாப்பிடலாம்.
- கிரீக் சாலட், சீசர் சாலட் போன்ற பல வகையான சாலட்களில் இவை சுவையை அதிகரிக்க உதவும்.
- ஸ்மூத்தியில் பூசணி விதைகளைச் சேர்ப்பதன் மூலம் அதன் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகரிக்கும்.
- கஞ்சி அல்லது ஓட்ஸில் பூசணி விதைகளைச் சேர்த்து காலை உணவை அதிக சத்தானதாக மாற்றலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது உலர்ந்த பழங்களையும் சேர்க்கலாம்.


(இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கடைகளில் போலியான பிரட் வாங்கி ஏமாற வேண்டாம்! இந்த முறையில் சரி பார்க்கவும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ