வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சைவ உணவுகள்: ட்ரை பண்ணி பாருங்க

Foods for Vitamin B12 Deficiency: உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், நாம் பல வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சைவ மற்றும் வேகன் உணவு முறைகளைப் பின்பற்றுபவர்கள் தேவையான வைட்டமின் பி12 -ஐ பெறுவதில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2025, 01:38 PM IST
  • பல காய்கறிகளில் வைட்டமின் பி12 உள்ளது.
  • எனினும், இவற்றில் இதன் அளவு குறைபாக இருக்கலாம்.
  • ஆனால், வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக இவற்றை உட்கொள்ளலாம்.
வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சைவ உணவுகள்: ட்ரை பண்ணி பாருங்க

Foods for Vitamin B12 Deficiency: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து என இவை அனைத்தும் நமக்கு தேவை. வைட்டமின்களில் வைட்டமின் பி12 ஒரு முக்கியமான வைட்டமினாக பார்க்கப்படுகின்றது. வைட்டமின் பி12 நமது உடலுக்கு அவசியமான ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும், குறிப்பாக இது நரம்பியல் செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

Add Zee News as a Preferred Source

உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், நாம் பல வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சைவ மற்றும் வேகன் உணவு முறைகளைப் பின்பற்றுபவர்கள் தேவையான வைட்டமின் பி12 -ஐ பெறுவதில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். இருப்பினும், வைட்டமின் பி12 ஐ வழங்கக்கூடிய சில சைவ உணவுகளும் உள்ளன. அவற்றைப் பற்றி பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் நமக்கு தெரிவிக்கிறார்.

வைட்டமின் பி12 அதிகம் உள்ள சைவ உணவுகள்

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் மற்றும் அதன் பொருட்களான தயிர், சீஸ், மோர் போன்றவை வைட்டமின் பி12 இன் நல்ல ஆதாரங்களாக உள்ளன. ஆகையால், வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் பால் மற்றும் பால் பொருட்களை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உலர் பழங்கள்

அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் பல உலர் பழங்களில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளன. தினமும் அவற்றை உட்கொள்வதால் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு சரியாவதுடன், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆற்றலும் கிடைக்கின்றன.

சோயா பொருட்கள்

சோயா பால், சோயா சீஸ், சோயா தயிர், சோயாபீன்ஸ் போன்ற சோயா பொருட்களிலும் வைட்டமின் பி12 காணப்படுகிறது. சைவ உணவு உண்பவர்கள் மற்றும் வேகன் உணவு உண்பவர்கள் தங்கள் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய இவற்றை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பச்சை காய்கறிகள்

பல காய்கறிகளில் வைட்டமின் பி12 உள்ளது. எனினும், இவற்றில் இதன் அளவு குறைபாக இருக்கலாம். ஆனால், வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக இதை உட்கொள்ளலாம். பசலைக் கீரை, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் பச்சைப் பயறு ஆகியவற்றை உட்கொள்வது நன்மை பயக்கும்.

அவகேடோ

அவகேடோ ஒரு ஆரோக்கியமான பழமாகும். இதில் வைட்டமின் பி12 நல்ல அளவில் உள்ளது. இதை உட்கொள்வது உங்கள் உடலுக்கு ஊட்டமளித்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

ஊட்டச்சத்துள்ள ஈஸ்ட்

ஊட்டச்சத்துள்ள ஈஸ்ட் வைட்டமின் பி12 இன் சிறந்த மூலமாக கருதப்படுகின்றது. மேலும் இது சைவ உணவு உண்பவர்களுக்கும் வேகன் உணவு உண்பவர்களுக்கும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதை சாலடுகள், சூப்கள் மற்றும் பிற உணவுகளில் சேர்த்து உட்கொள்ளலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க டயட் இருக்கிறீர்களா? தவறுதலாக கூட இதை செய்யாதீர்கள்

மேலும் படிக்க | ஆண்மை தன்மை, விந்தணு எண்ணிக்கையை பாதிக்கும்... ஆபத்தான சில பழக்கங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News