What Is Cervical Cancer : இந்தியாவை பொருத்தவரை, வருடத்திற்கு 74,000 முதல் 79,000 வரை கருப்பை வாய் புற்றுநோயால் பெண்கள் இறக்கின்றனர். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால், கண்டிப்பாக இதனை சரி செய்து கொள்ளலாம்.
கருப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?
கருப்பை வாய் புற்றுநோய் என்பது, கருப்பையின் கீழ் பகுதியில், பிறப்புறுப்புடன் இணையும் குறுகிய பகுதியில் (Cervix) ஏற்படும் செல்களின், கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும். இது பெரும்பாலும் HPV வைரஸ் தொற்று காரணமாக உண்டாகிறது. ஏறக்குறைய, அனைத்ஹ்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும், உயர் ஆபத்து HPV வைரஸ்களால், ஏற்படுகின்றன. இது, பாலியல் உறவு மூலம் பரவும் வைரஸ் ஆகும்.
அறிகுறிகள் என்ன?
உடலுறவுக்கு பின்னர், அல்லது மாதவிடாய் காலங்களுக்கு இடையில், எப்போதும் விட அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல்.
வெள்ளைப்படுவது துர்நாற்றம் அடித்தல்.
இடுப்பு அல்லது, கீழ் வயிற்றில் வலி ஏற்படுதல்.
எதனால் ஏற்படும்?
பல பாலியல் பார்ட்னர்களை வைத்துக்கொள்ளுதல், ஆரம்பகால பாலியல் செயல்பாடு, HPV தொற்று, புகைப்பிடித்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல்.
தடுப்பது எப்படி?
கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க HPV தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் ஆகும். இதனால், இந்த புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிகிச்சை:
அதே போல, புற்றுநோயின் நிலையை பொறுத்து, அறுவை சிகிச்சை, ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த புற்றுநோய் இருப்பதை, ஸ்கிரீனிங் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முழுமையாக குணப்படுத்த இயலும்.
தமிழக அரசு கொண்டு வந்த புது திட்டம்:
இந்தியாவில் முதன்முறையாக, சிறுமிகளுக்கான கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை, தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கியது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக, அதிக புற்றுநோய் ஆபத்துகள் இருக்கும் அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமாலைமற்றும் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த இலவச HPV தடுப்பூசி முகாம்கள், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எப்படி செயல்படும்?
இந்த தடுப்பூசி, கருப்பை வாய் புற்றுநோய் உருவாக்கும் HPV வைரஸ் உடலில் நுழையும் முன்பே, எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இதனால், HPV தொற்று அதன் மூலம் வருகிற கருப்பை வாய் புற்றுநோய் 90 சதவீதம் வரை தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசி எப்படி போட வேண்டும்?
எந்த தடுப்பூசிக்கும் போட்டுக்கொள்வதற்கு ஒரு அட்டவணை (Schedule) இருக்கிறது. 9 முதல் 14 வயதுள்ள சிறுமிகளுக்கு, இந்த தடுப்பூசி அதிக பலனை தரும் என கூறப்படுகிறது. அதாவது, முதல் டோஸ் தொடக்கத்தில் போடப்படும். இரண்டாவது டோஸ், முதல் ஊசி போட்ட 6 மாதங்களுக்கு பிறகு போடப்படும். இதையடுத்து 15 வயது முதல் 26 வயது வரையிருக்கும் பெண்களும், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம்.
பயன்பெறுவோர்:
தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் இந்த திட்டத்தின் மூலமாக, 3.38 லட்சம் பெண் பிள்ளைகள் பயன் பெறுவார்களாம். அரசு முகாம்களிலும், பள்ளிகளிலும் இந்த தடுப்பூசி முகாமானது நடைபெறுகிறது. இதில், 9-14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் தவறாமல் பங்கேற்று பயனடையுமாறு அறிவுருத்தப்படுகிறது. தகுந்த மருத்துவர் ஆலோசனையுடன், 15 முதல் 26 வயதுக்குட்பட்ட பெண்களும் இந்த தடுப்பூசியை போட்டு பயன்பெற்று கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பல் துலக்காமல் தண்ணீர் குடிக்கலாமா கூடாதா? மருத்துவர்கள் சொல்வது..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









