தூக்க வங்கி என்றால் என்ன? இதை பத்தி முதலில் தெரிஞ்சிக்கோங்க..

What Is Sleep Banking Know Its Meaning : சமீப காலமாக தூக்க வங்கி (Sleep Banking) என்கிற வார்த்தை பிரபலமாகி வருகிறது. இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 7, 2025, 04:28 PM IST
  • ட்ரெண்டிங்கில் இருக்கும் தூக்க வங்கி நடைமுறை
  • இதற்கு அர்த்தம் என்ன?
  • இங்கு தெரிஞ்சிக்கோங்க..
தூக்க வங்கி என்றால் என்ன? இதை பத்தி முதலில் தெரிஞ்சிக்கோங்க..

What Is Sleep Banking Know Its Meaning : உங்களது விடுமுறை தினங்களில், மெத்தையில் படுத்துக்கொண்டு, தூக்கத்தில் இருந்து எழ மனசே வராதா? உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் இந்த ஸ்லீப் பேங்கிங்கை உன்மையிலேயே மிகவும் விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். இப்போதைய உலகில் நமக்கே தெரியாத பல வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளன. அப்படி ஒரு வார்த்தைதான் தூக்க வங்கி. இது, உங்களை நீங்களே நன்றாக பார்த்துக்கொள்ளும் நடவடிக்கையாக இருப்பதோடு, தூக்கத்தை மேம்படுத்தவும் வழி வகுக்கிறது.

ஸ்லீப் பேங்கிங்:

இந்த ஸ்லீப் பேங்கிங் எனும் நடவடிக்கை, வழக்கத்தை விட அதிக தூக்கத்தை பெறும் நடைமுறையாகும். இது, உலக மக்களால் பின்பற்றப்படுகிறது. மக்கள் பலர், தினசரி தங்கள் தலைக்கு மேல் சுமக்கும் பல்வேறு வேலைகள் காரணமாக, தூக்கமின்மை பிரச்சனையால் தவிக்கின்றனர். இதனால் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில், வேலை நாட்களில் எவ்வளவு குறைவாக உறங்கினாலும், வேலை இல்லாத விடுமுறை நாட்களில் அத்தனை தூக்கத்தையும் சேமித்து வைத்து அதிக நேரங்கள் உறங்குவதுதான் ஸ்லீப் பேங்கிங். ஓய்வின்மை, தூங்குவதற்கு நேரம் கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு இந்த ஸ்லீப் பேங்கிங் ஆனது பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது.

இது எப்படி வேலை செய்யும்?

இதுவும் ஒரு வங்கியை போலத்தான் வேலை செய்யும். அதாவது, கூடுதலான தூக்கத்தை ‘டெப்பாசிட்’ செய்கின்றனர், பின்னர் உங்களுக்கு தேவை எனும் போது அந்த தூக்கத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அதாவது, Withdraw செய்து கொள்ளலாம். இது, தூக்கமின்றி தவிப்பதை தடுத்து நிறுத்துகிறது. இதன் மூலம் தூக்கத்தை பெற்ற பிறகு, உடலும் மூளையும் சரியான வழியில் இயங்க வழிவகுக்குகிறது. இப்படி தூக்கத்தை சேமித்து பின்பு பெரிதாக பெற்றுக்கொள்வதன் மூலம், உடலும் சரியாக இயங்குவதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்படும் பயன்கள்:

அறிவாற்றல் செயல்பாடு: இந்த தூக்கமுறை, விழிப்புணர்வு, அறிவாற்றல், அதிக கவனம், முடிவெடுத்தல் திறன் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இவை அனைத்தும் தூக்கமின்மை காலத்தில் இல்லாமல் இருக்கும். அதனை, இது தடுக்கிறது.

உடல் செயல்திறன்கள்: உடலில் ஸ்டாமினாவை அதிகரிக்க இந்த தூக்கமுறை உதவுகிறது. உடல் சோர்வில் இருந்து வேகமாக குணமடையவும் வழிவகுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளர்வதற்கு, தூக்கம் மிகவும் அவசியம். இது, தூக்கமின்மை காலத்தில் வராது. ஆனால் அந்த ஸ்லீப் பேங்கிங் முறை மூலமாக, நம் உடல் நன்றாக ஓய்வெடுத்து, நோயெதிர்ப்பு சக்தியும் வளரும்.

சிறந்த மனநிலை: பசி, தூக்கம் இருந்தாலே மனிதன் மனிதனாக இருக்க மாட்டான் என்பதை பார்த்திருப்போம். நாமே பல இடங்களில் இதற்கு உதாரணமாகவும் இருந்திருப்போம். தூக்கம் சரியாக இல்லை என்றால், கண்டிப்பாக மனநிலை எரிச்சலுடையதாக இருக்கும். அது மட்டும் இல்லாமல், இந்த நிலை தொடர்ந்தால் மன அழுத்தமும் அதிகமாகலாம். எனவே, அதனை தவிர்க்க இந்த தூக்க முறையானது உதவுகிறது.

மேலும் படிக்க | எப்போதும் தூக்க கலக்கமாகவே இருக்கிறதா? ‘இது’ காரணமாக இருக்கலாம்!

மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை... தினம் 8 மணி நேரம் தூங்குவதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News