)
Flaxseed Health Benefits: ஒரு சமச்சீர் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமல்ல, கொட்டைகள் மற்றும் விதைகளும் உணவில் சேர்க்கப்பட வேண்டும். பல வகையான விதைகள், சியா விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள், எள், சூரியகாந்தி விதைகள் போன்றபல விதைகள் இதில் அடக்கம். ஆளி விதைகள் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த விதைகள் உடலுக்கு புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களுடன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும் வழங்குகின்றன.
ஆரோக்கிய நலன் கொண்ட ஆளி விதைகளை பலர் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அதிகபட்ச பலனைப் பெற இந்த விதைகளை சாப்பிட சரியான நேரம் மற்றும் முறை என்னவென்று பலருக்கு தெரிவதில்லை. குடல் மருத்துவர் சௌர்பா சேத்தி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் ஆளி விதைகளின் ஆரோக்கிய பலனை முழுமையாகப் பெற ஆளி விதைகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆளி விதைகளை சாப்பிட சரியான நேரம் மற்றும் முறை
டாக்டர் சௌரப் சேத்தி, ஆளி விதைகளை சாப்பிட சிறந்த நேரம் காலை நேரம் தான் என்று கூறினார். ஆளி விதைகளை காலையில் சாப்பிட வேண்டும், ஏனெனில் அது குடல் வீக்கத்தைக் குறைக்கிறது. ஆனால், இந்த விதைகளை அப்படியே உட்கொள்வதற்குப் பதிலாக, அரைத்த பிறகு சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். அதோடு ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்க நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.
ஆளி விதைகளை சாப்பிடுவதன் நன்மைகள்
1. ஆளி விதைகளை சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த விதைகள் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகின்றன. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த இந்த ஆளி விதைகளை உட்கொள்ள வேண்டும்.
2. ஆளி விதைகள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதயத்திற்கு இதமானது ஆளி விதைகள். இதில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றன.
3. ஆளி விதைகள் ஹார்மோன் சமநிலைக்கு உதவியாக இருக்கும். இந்த விதைகளை சாப்பிடுவது மனநிலை ஊட்டச்சத்தை குறைக்கிறது. பெண்கள் குறிப்பாக இந்த விதைகளை உட்கொள்வதால் பயனடைகிறார்கள்.
4. ஆளி விதைகள் எலும்பு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் நிறைந்த இந்த விதைகளை சாப்பிடுவது எலும்புகளை பலப்படுத்துகிறது.
5. ஆளி விதைகளை எடை குறைக்கவும் சாப்பிடலாம். இந்த விதைகள் எடை மேலாண்மைக்கு உதவியாக இருக்கும். அவற்றை சாப்பிடுவது பசியை தூண்டாது. இது அதிகப்படியான உணவு உட்கொள்ளலைக் குறைக்கிறது.
6. ஆளி விதை சாப்பிடுவதால் சருமமும் பயனடைகிறது. இந்த விதைகள் சருமத்தை ஊட்டமளித்து, சருமத்தை பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ