முதல்முறை உடலுறவு கொள்ள..சரியான வயது எது? அறிவியல் சொல்வது இதுதான்!

What Is The Right Time To Get Intimate : அனைவருக்கும், எந்த வயதில் கன்னித்தன்மையை இழப்பது என்கிற சந்தேகம் இருக்கும். அதனை எந்த வயதில் இழக்க வேண்டும் தெரியுமா? இதோ பார்க்கலாம்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 24, 2025, 08:41 PM IST
  • உடலுறவு கொள்ள சரியான வயது
  • மருத்துவர்கள் சொல்வது என்ன?
  • அறிவியல் சொல்வது என்ன?
முதல்முறை உடலுறவு கொள்ள..சரியான வயது எது? அறிவியல் சொல்வது இதுதான்!

What Is The Right Time To Get Intimate : ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், உடலுறவு கொள்வதற்கு முன்பு அனைவருக்கும் கன்னித்தன்மை இருக்கும். முதல்முறை உடலுறவு கொள்வது என்பது அனைவருக்கும் எளிதான காரியமாக இருக்காது. உன்மையில் கன்னித்தன்மையை இழப்பதற்கு என்று ‘சரியான’ வயது என எதுவும் கிடையாது. நீங்கள் எப்போது சரி என்று நினைக்கிறீர்கள், எப்போது உங்களுக்கு சௌகரியமாக இருக்கிறதோ, எப்போது பாதுகாப்பாக உணர்கிறீர்களோ அப்போது உடலுறவு கொள்ளலாம். 

Add Zee News as a Preferred Source

மருத்துவர்கள் கூறுவது..

மருத்துவர்கள் பொதுவாக முதல்முறை உடலுறவு கொள்ள ஏற்புடைய வயதாக கூருவது, 18 வயதைத்தான். இதற்கு பின்வருபவை காரணங்களாக இருக்கின்றன.

உணர்ச்சி ரீதியான முதிர்ச்சி:

18 வயதில், உங்கல் மூளையில் ஒரு சிறு வளர்ச்சியும் ஏற்படுகிறது. இதனால் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கிறது. இந்த வயதில் உங்களால் உணர்ச்சி ரீதியாக சேர்தலையும் பிரிதலையும் ஏற்றுக்கொள்ள முடியும்.

உடல் ரீதியான முதிர்ச்சி:

இந்த வயதில், உங்கள் உடல் வளர்ச்சி அடைந்திருக்கும். பெண்களை பொருத்தவரை, அவர்களின் பிறப்புருப்பு வளர்ந்து, எந்த வித வலியோ, அடியோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆண்களால் அந்த வயதில் விந்து வெளியேறுதலையும், விரைப்பதையும் கட்டுப்படுத்த முடியும். 

18 வயதுக்கு முன்பு, பாலினம் அல்லது பாலியல் உணர்ச்சிகள் குறித்த அறிவு குறைவாக இருக்கும். இதனால், பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட வாய்ப்புள்ளது. STI அல்லது இளம் வயதில் கருவுறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளும் இதனால் ஏற்படலாம். பாதுகாப்பு குறித்த முதிர்சி இல்லாததால் இவை ஏற்படுகின்றன. 

நீதி ரீதியாக..

இந்தியா உட்பல, பல உலக நாடுகளில் 18+ வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதில்தான் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, இவை இரண்டை வைத்தும் பார்க்கும் போது 18+ வயது உடலுறவு கொள்ள சரியான வயதாக உள்ளது. 

கவனத்தில் கொள்ள வேண்டியது:

பாதுகாப்பு:

உடலுறவு கொள்ளும் போது ஆணுறை போட்டுக்கொள்வது அவசியம் ஆகும். இதனால், Sexually transmitted infections எனப்படும் பாலியல் ரீதியான நோய் பரவுதலை தடுப்பதோடு, தேவையற்ற கருவுருதலையும் தவிர்க்கலாம்.

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் அல்லது பிற வழிகளும் இதற்கு உதவும்.

STI விழிப்புணர்வு:

நீங்கள் முதல் முறையாக உடலுறவு கொண்டாலும் கூட, உங்களுக்கோ அல்லது உங்கள் பார்ட்னருக்கோ தெரியாமல் கூட தொற்று ஏற்படலாம்.

புதிய பார்ட்னருடன் உடலுறவு கொள்வதற்கு முன்பு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

பிறப்புருப்பு ஆரோக்கியம்:

ஆணாக இருந்தாலும் பெண்ணாக பிறப்புறுப்பை பற்றி தெரிந்து வைத்துக்கொண்டு, அதனை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்வது அவசியம் ஆகும். பெண்களுக்கு, வலி ​​அல்லது அடிபடுவதை தவிர்க்க, சரியான lubrication-ஐ உபயோகிக்க வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரை, தொற்று மற்றும் எரிச்சலைத் தவிர்க்க சுகாதாரம் மற்றும் சுத்தம் முக்கியம். 

மன & உணர்ச்சி ஆரோக்கியம்:

உடலுறவு உணர்ச்சிகளை வளர்க்கலாம் - குற்ற உணர்வு, உணர்ச்சி ரீதியான பற்றுதல், பதட்டம் அல்லது பாதுகாப்பின்மை.

நீங்கள் அதை உங்களுக்காகச் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் பின்விளைவுகளைக் கையாள நீங்கள் மனதளவில் தயாராக இருக்கிறீர்களா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | உடலுறவு... ஒரு மாதத்திற்கு எத்தனை முறை வைத்துக்கொள்ள வேண்டும்?

மேலும் படிக்க | உடலுறவுக்குப் பிறகு தம்பதிகள் இந்த தவறுகளை செய்யக்கூடாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News