)
Kids Non Veg Foods Age : நாம் வளர்ந்த பிறகுதான், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எதெல்லாம் நம் உடலுக்கு கேடு விளைவிக்காமல் இருக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், குழந்தையாக இருக்கும் போது தாய்ப்பாலில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பிற உணவுகளுக்கு குழந்தையை பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு அசைவ உணவு கொடுக்கலாமா?
பெற்றோர்கள் பலருக்கும் இருக்கும் ஒரே சந்தேகம், குழந்தைகளுக்கு அசைவ உணவு கொடுக்கலாமா வேண்டாமா என்பதுதான். சில குழந்தைகள் நல மருத்துவர்கள், ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் குழந்தைகளுக்கு அசைவ உணவு கொடுக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் இன்னும் சிலர், அந்த கூற்றை தவறு என்று கூறுகின்றனர்.
மருத்துவர் சொல்வது:
குழந்தைகளுக்கு அசைவ உணவு கொடுப்பதை பற்றி, மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது என்ன என்பது குறித்து, இங்கு பார்ப்போம்.
ஆறு மாத குழந்தைக்கு, சரியாக திட்டமிட்டு கறி, மீன், முட்டை உள்ளிட்டவற்றை சாப்பிட வைக்கலாம் என்கிறார் சந்தோஷ் ஜேக்கப். ஆறு மாதத்தில் குழந்தைகளுக்கு திட உணவுகளை ஆரம்பிக்கும் போதே, அசைவத்தையும் சாப்பிடலாம் என்கிறார் சந்தோஷ் ஜேக்கப்.
அசைவ உணவை கொடுக்கும் போது, அதனை நன்றாக வேக வைத்து அறைத்து கொடுக்கலாம் என்கிறார். எளிதாக தொண்டையில் சிக்காத அளவிற்கு செய்து கொடுக்க வேண்டும். அரிசி சாதம், உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை சேர்த்து அறைத்து கொடுக்கலாம். உலக சுகாதார மையம் கூட இதைதான் சொல்கிறதாம். இதனால் குழந்தைகளுக்கு குறைந்த அளவில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து உள்ளிட்டவை கிடைப்பதாக கூறுகிறார்.
ஒரு வருடத்திற்கு பிறகு..
குழந்தைகளுக்கு எப்போது கறி, மீன், முட்டை உள்ளிட்ட உணவுகளை ஆரம்பித்த ஒரு வருடத்திற்கு பிறகு, சின்ன சின்ன துண்டாக கொடுக்க ஆரம்பிக்கலாம். பற்கள் வளர்ந்த பின்பும் கூட, அவர்கள் ஈசியாக சாப்பிடுவது போல அந்த கறித்துண்டுகள் இருக்க வேண்டுமாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட உணவுகளாக கூறப்படும் சாசேஜஸ், நக்கட்ஸ் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது என்கிறார். அப்படி அதை கொடுக்க வேண்டும் என்றால், 3 வருடத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்கிறார்.
கவனிக்க வேண்டிய விஷயம்:
மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் மீண்டும் மீண்டும் இந்த வீடியோவில் சொல்லும் ஒரே விஷயம், குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை கொடுக்கும் போது அதனை வேக வைத்து கொடுக்க வேண்டும் என்பதுதான். இதனால், அவர்களுக்கு ஏற்படும் அஜீரண குறைபாட்டை நாம் தவிர்ப்பதோடு, உடலை ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொள்ள முடியும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள், மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் பேசிய வீடியோவை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை ஆகும். இதற்கு ZEE TAMIL NEWS பொறுப்பேற்காது என்பது குறிப்பிடத்தக்கது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ