)
இன்றைய வாழ்க்கைமுறையில் நமது உணவுமுறைதான் நமது உடல் உறுப்புகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமீபகாலமாக இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றால் முதியவர்களை விட இளையவர்கள் அதிகம் உயிரை இழக்கின்றனர். நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான இதயம், இதயம் உடல் முழுவதற்கும் இரத்த ஓட்டத்தை செலுத்தும் முக்கிய பணியை மேற்கொள்கிறது.
இதயத்தை பலவீனப்படுத்தும் சில ஊட்டச்சத்து குறைபாடுகள்
இடைவிடாது பணியாற்றும் இதயத்தை, சில சத்துக்களின் குறைபாடு பலவீனப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?... ஆம், இதயநோய் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதுடன், சில ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சில ஊட்டச்சத்து குறைபாடு இதயம் சரியாக செயல்படும் திறனை பாதித்து, மாரடைப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில், எந்த ஊட்டச்சத்து குறைபாடு இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் அதனை போக்க உதவும் உணவுகளையும் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
இதயத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதன் குறைபாடு LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பதோடு, இதயத்திற்கு தேவையான HDL என்னும் நல்ல கொலஸ்ட்ராலை குறைக்கலாம். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள்
கொழுப்பு மீன் (சால்மன், டுனா), வாதுமை பருப்புகள் மற்றும் ஆளி விதைகள், சியா விதைகள் ஆகியவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன
மெக்னீசியம்
மெக்னீசியம் இதய தசைகள் மற்றும் நரம்புகள் சரியாக செயல்பட உதவுகிறது. அதன் குறைபாடு உயர் இரத்த அழுத்தம் மற்றும் அசாதாரண இதயத் துடிப்பை ஏற்படுத்தி, இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.
மெக்னீசியம் சத்து நிறைந்த உணவுகள்
பச்சை இலை காய்கறிகள் (கீரை, ப்ரோக்கோலி), நட்ஸ் மற்றும் விதைகள், முழு தானியங்கள் ஆகியவை மெக்னீசியம் சத்து நிறைந்த சில உணவுகளில் அடங்கும்.
பொட்டாசியம்
பொட்டாசியம் உடலில் சோடியத்தின் விளைவைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. அதன் குறைபாடு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.
பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகள்
வாழை, ஆரஞ்சு வெண்ணைப் பழம் ஆகிய பழங்களிலும், இனிப்பு உருளைக்கிழங்கு ஆகியவற்றிலும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.
வைட்டமின் டி
இதய நரம்புகளை வலுப்படுத்த வைட்டமின் டி அவசியம். அதன் குறைபாடு இதய துடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம்.
வைட்டமின் டி நிறைந்துள்ள உணவுகள்
முட்டை மற்றும் பால், காளான் ஆகிய உணவுகளில், வைட்டமின் டி அதிகம் உள்ளது. அதோடு, தினமும் 30 நிமிடங்கள் சூரிய ஒளி படுவதாலும், வைட்டமின் டி சத்தை போதுமான அளவு பெறலாம்
கோஎன்சைம் Q10 (CoQ10)
CoQ10 கோஎன்சைம் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது இதய செல்களுக்கு ஆற்றலை அளிப்பதோடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. இதன் குறைபாடு இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கும்.
தீர்வைத் தரும் உணவுகள்
ஆலிவ் எண்ணெய், மீன் மற்றும் இறைச்சி, நட்ஸ் வகைகள் ஆகியவற்றில், CoQ10 கோஎன்சைம் என்ற ஆக்ஸிஜனேற்றி நிறைந்துள்ளது
இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவும் சில உணவுகள்
புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள், ஓட்ஸ் மற்றும் முழு தானியங்கள், கொழுப்பு மீன் மற்றும் விதைகள், குறைந்த கொழுப்பு பால் பொருட்கள் ஆகிய இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க, உங்கள் உணவில் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருப்பது முக்கியம். மேலே குறிப்பிட்டுள்ள சத்துக்களில் ஏதேனும் குறைபாடு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதனை நீக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ