தினம் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம்... மருத்துவர் கூறும் முக்கிய காரணங்கள்

தூக்கம், உறக்கம் அல்லது நித்திரை என்பது மனிதர்கள் ஓய்வு கொள்ளும் ஓர் இயல்பான நிலை. ஆரோக்கியத்திற்கும், சீரான வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமானது. ஒரு ஆரோக்கியமான நபர் தினமும் குறைந்தது 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்று அறிவியல் தெளிவுபடுத்தியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 25, 2025, 12:52 PM IST
  • தூக்கம் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் எவ்வாறு தீர்மானிக்கிறது?
  • தினம் 8 மணிநேர ஆழ்ந்த தூக்கத்தின் நன்மைகள்.
  • தூக்கம் இல்லை என்றால் உடல் ஆரோக்கியம் எல்லா வகையிலும் பாதிக்கப்படலாம்.
தினம் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம்... மருத்துவர் கூறும் முக்கிய காரணங்கள்

தூக்கம், உறக்கம் அல்லது நித்திரை என்பது மனிதர்கள் ஓய்வு கொள்ளும் ஓர் இயல்பான நிலை. ஆரோக்கியத்திற்கும், சீரான வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமானது. ஒரு ஆரோக்கியமான நபர் தினமும் குறைந்தது 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்று அறிவியல் தெளிவுபடுத்தியுள்ளது. தூக்கம் ஏன் மிகவும் முக்கியமானது மற்றும் அது எவ்வாறு ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் தீர்மானிக்கிறது என்பதை டாக்டர் இம்ரான் அகமது விளக்குகிறார்.

Add Zee News as a Preferred Source

தினம் 8 மணிநேர ஆழ்ந்த தூக்கத்தின் நன்மைகள்

1. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது

தினமும் 8 மணி நேரம் தூங்குவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். தூக்கத்தின் போது, ​​நமது உடலுக்கு இளைபார நேரம் கிடைத்து புத்துணர்வு பெறுகிறது. இது நமது மூளை மற்றும் உடல் உறுப்புகளை சரியாகச் செயல்பட வைக்கிறது. ஆழ்ந்த தூக்கம் இல்லை என்றால் உடல் ஆரோக்கியம் எல்லா வகையிலும் பாதிக்கப்படலாம்.

2. ஞாபக சக்தி அதிகரிக்க உதவும் தூக்கம்

தனது உடலுக்குத் தேவையானதை விட குறைவான அளவு தூக்கத்தை எடுத்துக்கொள்ளும் நபர், தனது நினைவாற்றல் மற்றும் மனநிலையில் மிகவும் மோசமான தாக்கத்தை தன்னை அறியாமல் ஏற்படுத்துகிறார். எனவே, முடிந்தவரை தினமும் 8 மணிநேரம் ஆழ்ந்து தூங்க முயற்சி செய்யுங்கள். 

3. செயல்திறனை மேம்படுத்த உதவும் தூக்கம்

நமது வேலையின் செயல்திறனை அதிகரிக்க வேண்டுமானால், நமக்கு முழுமையான மற்றும் அமைதியான தூக்கம் இருக்க வேண்டும். இது வேலை உற்பத்தித் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நேர்மறையான மனநிலையுடன் பணியாற்றும் தன்மையை உண்டாக்குகிறது.

4. நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியம்

சரியான தூக்கம் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. தூக்கத்தின் போது, ​​​​நம் உடலில் ஓய்வு மற்றும் ரீசார்ஜ் செயல்முறை நடைபெறுகிறது. இது பல வகையான நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அளிக்கிறது.

மேலும் படிக்க | உடல் பருமன் மளமளவென்று குறைய உதவும்... புரதம் நிறைந்த சில சாலட் வகைகள்

5. மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

தூக்கமின்மை மன ஆரோக்கியத்தை பாதிக்கும். இது உங்களுக்கு கவலை, சோர்வு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதன் மூலம், மூளை ஓய்வு பெறுகிறது மற்றும் நபர் நேர்மறையான சிந்தனை உணர்வைப் பராமரிக்கிறார்.

6. மன அழுத்தம் குறைதல்

தூக்கமின்மை மன அழுத்தத்தை அதிகரிக்கும். இது நம்மை கவலையடையச் செய்து அசௌகரியத்தை உண்டாக்கும். ஆரோக்கியமான தூக்க முறையைப் பின்பற்றுவதன் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம். அதோடு மனம் புத்துணர்ச்சியுடன் இருப்பதால், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியும்.

7. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தூக்கம்

தூக்கமின்மை செரிமான பிரச்சனைகளுக்கான மூல காரணங்களில் ஒன்று. இவை, ஊட்டச்சத்து குறைபாடு, மன நல பிரச்சனை போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே, ஆழ்ந்த தூக்கம் செரிமான ஆரோக்கியத்திற்கு முக்கியம்

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ மருத்துவ நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், குடும்ப மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறும் படி கேட்டுக் கொள்கிறோம். எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | உடல் எடையை கட்டுப்படுத்தனுமா? இரவு உணவுக்கு பின் இதை செய்யுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News