குளிர்காலத்தில் பாலியல் இச்சை அதிகரிப்பது ஏன்? காரணம் இதுதான்!

Why Do We Crave Physical Intimacy During Winter : குளிர்காலத்தில் பாலின பாகுபாடின்றி அனைவருக்கும் பாலியல் ஆசை அதிகரிக்கும். இதற்கான காரணம் என்ன தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Dec 1, 2025, 07:53 PM IST
  • குளிர் காலத்தில் பாலியல் ஆசை அதிகரிப்பது..
  • இதற்கு பின் இப்படியொரு காரணமா?
  • முழு விவரம், இதோ!
குளிர்காலத்தில் பாலியல் இச்சை அதிகரிப்பது ஏன்? காரணம் இதுதான்!

Why Do We Crave Physical Intimacy During Winter : குளிர்காலம் வருகையில், எப்போதும் நமது மன மற்றும் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் லிபிடோ இயற்கையாகவே அதிகரிக்கும். ஹார்மோன்கள், சூரிய ஒளி மற்றும் உடல் சூட்டின் காரணமாக பாலியல் ஆசை அதிகரிக்கலாம். குளிர் காலம் பருவ மாற்றத்திற்கான காலம் மட்டும் கிடையாது, நம் உடல்நிலையை மாற்றும் காலங்களும் கூட. இதனால் உடல் நெருக்கம் அதிகரிக்க துண்டும். பலருக்கும், பாலி ஆசை அதிகரிக்கும். இதற்கான காரணம் குறித்து மருத்துவர் ஷஷாங் கூறும் விஷயங்கள், இதோ.

Add Zee News as a Preferred Source

லிபிடோ என்றால் என்ன?

ஒருவரின் இயற்கையான பாலியல் ஆசைதான் லிபிடோ எனப்படுகிறது. மனநிலை, மன அழுத்தம், உடல்நலம் உள்ளிட்டவைகளை வைத்து இந்த ஆசைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இது, ஒவ்வொருவருக்கும் மாறுபடும். தேவையான தூக்கம், குறைந்த மன அழுத்தம், சரியான வாழ்க்கை முறை ஆகியவற்ற பொருத்தம் இவை அமையும். அதே சமயத்தில் பதற்றம், சோர்வு, நோய்கள் உள்ளிட்டவை லிபிடோ குறைய காரணமாக இருக்கலாம்.

ஹார்மோன் மாற்றங்கள்: 

குளிர்காலத்தில் பெரிதாக ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இது மனநிலையை மேம்படுத்தும் உடலில் இருக்கும் ரசாயனத்தை அதிகரிக்கிறது. நெருக்கம், ஆறுதல், அரவணைப்பை இது அதிகரிக்கிறது. குளிர் காலத்தில் அதிக நேரம் வீட்டிற்குள்ளேயே இருப்பதால், உணர்ச்சிகள் மற்றும் மன ரீதியாக யாருடனாவது நெருக்கமாக இருக்க வேண்டும் என்கிற தூண்டுதல் அதிகரிக்கும். 

உளவியல் காரணங்கள்:

குளிர் காலத்தில் இப்படி நெருக்கமான உணர்வு அதிகரிக்க இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன. சூடான, பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டும் என்று தோன்றினால் இவ்வாறான ஆசை அதிகமாக உருவாகும். இந்த உணர்ச்சிகள் மனதை தளர்த்தி, உளவியல் ரீதியான உணர்ச்சி பிணைப்பை அதிகரிக்கும். இதனால், லிபிடோவும் இயற்கையாகவே உயர்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

சுற்றுச்சூழல்:

லிபிடோ அதிகரிப்பதற்கு, சுற்றுச்சூழலும் முக்கிய காரணமாக விளங்குகிறது. இந்த காலத்தில் சூரிய ஒளி பிரகாசமாக் கிடைக்கிறது. இதனால், செரோடோனின் மற்றும் வைட்டமின் டி கிடைத்து, மனநிலையை மேம்படுத்துகிறது. அதே போல, நம் உடலின் ஆற்றலும் அதிகரிப்பதால் உடல் இயற்கையாகவே சுறுசுறுப்பாகி லிபிடோவும் தூண்டப்படுகிறது. ஒரு சிலருக்கு சோர்வு, மனநிலை மாற்றங்கள் உண்டானால் லிபிடோவும் குறையும்.

குளிர்:

குளிராக இருக்கும் போது இயற்கையாகவே நமக்கு வெப்பநிலை அதிகமுள்ள இடத்தில் இருக்க வேண்டும் என்று தோன்றும். இதனால், உடல் நெருக்கம் அதிகரிக்க, பாலியல் உணர்வும் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் குளிர்காலத்தில் நீண்ட நேரம் நாம் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் பார்ட்னருடனான நெருக்கம் அதிகமாகிறது. பார்ட்னர் இல்லை என்றாலும், அதற்கான பாலியல் ஆசையும் அதிகரிக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள், மருத்துவர் ஷஷாங்க் கூறியவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை ஆகும். இதற்கு ZEE TAMIL NEWS பொறுப்பேற்காது என்பது குறிப்பிடத்தக்கது.)

மேலும் படிக்க | முதல்முறை உடலுறவு:நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ‘அந்த’ 3 விஷயங்கள்!

மேலும் படிக்க | முதல்முறை உடலுறவு கொள்ள..சரியான வயது எது? அறிவியல் சொல்வது இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News