இந்தியாவில் பலரது வீடுகளிலும் இருக்கும் பெரிய தொல்லை என்னவென்றால் கொசு தான்.  மாலை பொழுது ஆரம்பித்தவுடன் கொசுவும் வந்துவிடும்.  இதனால் பல நோய் தொற்றுகளும் ஏற்படுகிறது. நமது சுற்றுசூழலின் ஒரு பகுதியாக கொசுவும் உள்ளது.  மனிதர்களைப் போலவே, கொசுக்களுக்கும் அவற்றின் சொந்த வாழ்வியல் சுழற்சி உள்ளது. பொதுவாக ஆண் கொசுக்கள் பூக்களிலிருந்து தேனை எடுக்கின்றன.  அதே சமயம் பெண் கொசு தான் மனிதர்களை கடிக்கிறது. பெண் கொசுக்கள் மனிதர்களின் ரத்தத்தில் இருக்கும் புரதங்களை எடுப்பதற்காக கடிக்கின்றன. இந்த புரதங்கள் கொசுக்களின் முட்டைகளை உற்பத்தி செய்யத் தேவைப்படுகின்றன. மனிதர்களை கடிக்கும் போது பெண் கொசு உமிழ்நீரை இரத்தத்தில் செலுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Yoga For Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சூப்பர் யோகாசனங்கள்!


கொசு மனிதர்களை கடிப்பதால் நமக்கு மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற வைரஸ் தொற்றுகள் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் வழிவகை செய்கிறது.  கொசுவினால் ஏற்படும் நோய்களால் உலகம் முழுவதும் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகிறது. கொசு கடிப்பதைத் தடுக்கவும், பரவும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் கொசு சிலரை மட்டும் அதிகம் கடிக்கும், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது அவசியம்.  பெண் கொசு ஆனது அதனுடைய கண்பார்வை மற்றும் ஆண்டெனாக்கள் மூலம் அதன் இழக்கை கண்டறிந்து கடிக்கிறது. 


கொசுவில் இருக்கும் இந்த சிறப்பு ஆண்டெனாக்கள் கார்பன் டை ஆக்சைடு, ஈரப்பதம், இரசாயன வாசனைகள் போன்றவற்றை கண்டறிய உதவுகின்றன. கொசுக்கள் வெளிர் நிறங்களை விட, நல்ல டார்க் நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிதிருப்பவர்களை தேடி கடிக்கின்றன. மேலும், டவுசர் போன்ற குட்டையான ஆடைகளை அணிவது அதிக கொசு கடிக்க காரணம் ஆகும்.  டெங்குவை உண்டாக்கும் கொசு வகையான ஏடிஸ், கால்களில் கடிக்காமல், கை பகுதியில் அதிகம் கடிக்கிறது. அதே போல மலேரியாவை உண்டாக்கும் அனோபிலிஸ் வகை கொசுக்கள் கைகளை விட, கால்களை அதிகம் கடிக்கின்றன. 


சில இரத்த வகை கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் விரும்பி கடிக்கின்றன. "O" இரத்த வகை கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன. பெண் கொசுவுடன் இருக்கும் ஆண்டெனாக்கள் வெப்ப உணர்திறன் கொண்டவை. உங்கள் உடல் அதிகம் வெப்பத்தை வெளியிட்டால் கொசுக்கள் தேடி வந்து கடிக்கும்.  குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்கள், உடலில் அதிக வெப்ப உற்பத்தியைக் கொண்டவர்களுக்கு அதிகமாக கொசு கடிக்கலாம்.  மேலும் அதிகப்படியான வியர்வை கொண்டவர்களையும் கொசு அதிகம் கடிக்கிறது.  ஒவ்வொரு மனிதனுக்கும் சில பாக்டீரியாக்கள் உள்ளன. மேலும், ஒவ்வொரு மனிதனும் தங்கள் தோலில் வியர்வையை உற்பத்தி செய்கிறார்கள், அது கொசுக்களை அதிகம் ஈர்க்கிறது.


கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலிலும் உடலியலிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. கர்ப்பகால ஹார்மோன்கள் உடலில் அதிக வளர்சிதை மாற்றத்திற்கும் அதிக வெப்ப உற்பத்திக்கும் வழிவகுக்கும். இவை பெண் கொசுக்களை அதிகம் ஈர்க்கிறது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்களை கொசு அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது.  அதே போல மது அருந்துபவர்களை கொசு அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது.  பொதுவாக மது அருந்துபவர்களின் உடல் சூடு அதிகரித்து. உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, வியர்வை அதிகமாகிறது. இதன் காரணமாக கொசு அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது. 


மேலும் படிக்க | பித்தப்பை கற்கள் இருந்தால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்குமா? ஷாக்கிங் ஹெல்த் அலர்ட்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ