இன்றைய காலகட்டத்தில், யோகா வெறும் உடல் பயிற்சிக்கானது மட்டுமல்லாமல் மன அமைதி, ஆன்மீக விழிப்புணர்வுக்கும் தேவையான பயிற்சி கலையாகும். இதன் முக்கியத்துவதும் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக இன்றைய மிஷன் வாழ்க்கையில் கோடிக்கணக்கான மக்கள் மன அழுத்தத்தில் தத்தளித்து வருகின்றனர். மேலும் இவர்களிடையே பதற்றம் சூழல் எப்போதுமே இருந்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், யோகா பயிற்சி ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த தீர்வாகும். ஒரு காலத்தில் யோகா பயிற்சியை வெறும் பாரம்பரிய கலையாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆரோக்கியமான உடலைப் பராமரிப்பதில் ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது. மேலும் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் யோகா பயிற்சியை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகின்றனர்.
இன்றைய நவீன உலகில் யோகா பயிற்சிக்கு தனி மவுசு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பதஞ்சலி நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பதஞ்சலி நிறுவனம் பாபா ராம்தேவுக்குச் சொந்தமான ஆயுர்வேத பொருட்கள் மற்றும் இயற்கை வைத்தியங்களை விளம்பரப்படுத்தும் நிறுவனம் ஆகும்.
கடந்த சில ஆண்டுகளாக உடல், மன மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்திற்கான யோகாவை ஊக்குவிப்பதில் பதஞ்சலி நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது.
பதஞ்சலி யோகாவின் சிறப்புகள்
பதஞ்சலி யோகா உடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கு இடையிலான சமநிலையை வலியுறுத்துகிறது. இது எட்டு அத்தியாவசிய கூறுகளை உள்ளடக்கிய அஷ்டாங்க யோகாவை வலியுறுத்துகிறது. அவற்றை இங்கு வரிசையாக காணலாம்.
1. யமன் (எதிகல் சித்தாந்தம்)
2. நியமம் (பர்சனல் டிசிப்ளின்)
3. ஆசனம் (ஃபிஜிகல் போஸ்சர்)
4. பிராணயாமா (சுவாசக் கட்டுப்பாடு)
5. பிரத்யாஹாரம் (உணர்வுகளின் ஒருங்கிணைப்பு)
6. தாரணா (ஏகாக்ரதா)
7. தியானம் மெடிடேஷன்)
8. சமாதி (ஆன்மீக அறிவு)
பதஞ்சலி யோகாவின் நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள்?
பதஞ்சலி யோகா வெறும் உடல் தகுதியைப் பற்றி மட்டுமல்ல, மன அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியையும் மையமாகக் கொண்டுள்ளது.
யோகா செய்வதால் மக்கள் தங்களைப் புரிந்துகொள்ளவும் மன அமைதியைக் காணவும் உதவும். இதனால் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவுகிறது. பதஞ்சலி யோகாவின் புகழ் வேகமாக அதிகரித்து வருவதற்கான இதுவே முக்கிய காரணம் ஆகும்.
பதஞ்சலி யோகா அறக்கட்டளை
உத்தரகண்ட் மாநிலத்தின் யோகா நகரமான ரிஷிகேஷில் அமைந்துள்ள பதஞ்சலி ஹத யோகா அறக்கட்டளை, பழம்பெரும் யோகா பயிற்சியை இன்றைய வாழ்க்கையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஹத யோகா, அஷ்டாங்க யோகா, குண்டலினி யோகா மற்றும் சிகிச்சைக்கான சிறப்பு யோகா குறித்த அமர்வுகள் மற்றும் பட்டறைகள் உள்ளன. இவை எல்லா வயதினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சிறப்பாக சிகிச்சையளிக்கப்பட்ட யோகா மன அழுத்தம், பதற்றம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது. இதில் யோகா, சுவாச நுட்பங்கள், தியானம் ஆகியவை அடங்கும். மேலும், இங்கு யோகாவுடன் ஆயுர்வேதமும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் சரியான உணவுமுறை, நல்ல வாழ்க்கை முறை மற்றும் மூலிகை சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது, இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்பட உதவிகரமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









