)
உடல் எடை குறைப்பு பயணம் பலருக்கும் கடிணமாக இருக்கும். ஆனால் இதுபோன்ற கதைகளை கேட்டால், புது உத்வேகம் பிறக்கும். ஆம், 130 கிலோ எடை இருந்த பெண் ஒருவர் தனது விடாமுயற்சியால் 70 கிலோ குறைத்துள்ளார். அவர் தற்போது 60 கிலோ மட்டுமே உள்ளார். இது குறித்த பதிவிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது இந்த முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்ததற்காகவும் பலருக்கும் ஊக்க மளிப்பதற்காகவும் பலரும் பாராட்டினர்.
130 கிலோ உடல் எடை கொண்ட சிம்ரன் பூனியா சுய சந்தேகம் மற்றும் சோகத்தின் சுழற்சியில் சிக்கி இருந்தார். வாழ்க்கையின் மகிழ்ச்சியை காண போராடினார். பலரும் அவரை கேலி செய்து உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு பாலிக்கு பயணம் மேற்கொண்ட போது, எடை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தவித்தால். இதுவே ஒரு விழிப்புணர்வாக மாறியது. இனிப்பு சாப்பிடுவது புகைப்பிடிப்பது உள்ளிட்டவைகளை கைவிட்டார். ஒரு நிலையான உடல் எடை குறைப்பு பயணத்தை தொடங்கினார்.
அவரது எடை குறைப்பு பயணம்
சிம்ரன் பூனியாவின் உடல் எடை குறைப்பு குறுக்குவழிகளிலோ அல்லது திடீர் உணவுமுறைகளால் உந்தப்படவில்லை. மாறாக தூய அர்ப்பணிப்பும் நிலையான முயற்சிகளுமே காரணம் ஆகும். பயணத்தின் தொடங்கத்தில் சிம்ரன் 700 மீட்டர் நடக்கவே கஷ்டப்பட்டுள்ளார். அவரது விடாமுயற்சியால் நாளடைவில் அது கிலோ மீட்டர்களாக மாறியது.
அதேபோல் கார்டியோ அவரது உடல் எடை குறைப்புக்கு பெரிதாக உதவி உள்ளது. அதேபோல் உணவுமுறைகளில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். தேவையான சத்தான் உணவுகளை எடுத்துக்கொண்டார். ஃபாஸ்ட் புட் மற்றும் நொருக்குத் தீணிகள் போன்றவற்றையை தவிர்த்தார். இது அவரது உடல் எடையை குறைக்க உதவியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ