Women's Day 2025: பாடாய் படுத்தும் PCOS, ஹார்மோன்களை சீர்படுத்தும் டயட் இதோ

Women's Day 2025: இந்த காலத்தில் பெண்களை பெரிய வகையில் பாதிக்கும் நோய்களில் முக்கியமாக இருப்பவை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி கோளாறு (PCOD). இவை ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 5, 2025, 05:00 PM IST
  • பெண்களை படுத்தும் PCOS.
  • ஹார்மோன் நிலையை சரி செய்வது எப்படி?
  • இயற்கையான வழிகள் இதோ.
Women's Day 2025: பாடாய் படுத்தும் PCOS, ஹார்மோன்களை சீர்படுத்தும் டயட் இதோ

Women's Day 2025: மார்ச் 8, 2025 மகளின் தினம் கொண்டாடப்படவுள்ளது. வீடு, குடும்பம், வேலை, வியாபாரம், விளையாட்டு, விண்வெளி, அரசியல் என அனைத்திலும் தங்களுக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வரும் பெண்களை போற்றும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் மிக அவசியமாகும். குறிப்பாக இந்த காலத்தில் பெண்களை பெரிய வகையில் பாதிக்கும் நோய்களில் முக்கியமாக இருப்பவை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி கோளாறு (PCOD). இவை ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படுகின்றன.

உலகெங்கிலும் லட்சக்கணக்கான பெண்கள் PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். PCOS உள்ளவர்கள் சர்க்கரை உட்பட பல பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்ற குழப்பம் இவர்களிடம் உள்ளது. PCOS-ன் போது பெண்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்பதை டாக்டர் ரிதிமா கம்சேரா பகிர்ந்துள்ளார். அந்த தகவலை இங்கே காணலாம்.

இனோசிட்டால்

PCOS நோயாளிகளுக்கு இனோசிட்டால் மிகவும் நன்மை பயக்கும். இனோசிட்டால் வைட்டமின் பி8 என்றும் அழைக்கப்படுகிறது. இது உடலில் இன்சுலினைக் கட்டுப்படுத்துவதோடு, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவையும் குறைக்கிறது. இனோசிட்டால் உட்கொள்வது மனநிலையையும் மேம்படுத்துகிறது. உங்கள் உணவில் இனோசிட்டால் கிடைக்க, நீங்கள் சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ் மற்றும் கொட்டைகளை உட்கொள்ள வேண்டும்.

விதைகள்

PCOD மற்றும் PCOS இருந்தால், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனைக் கட்டுப்படுத்த உங்கள் உணவில் விதைகளைச் சேர்க்கவும். ஆனால் இந்த விதைகளை மாதவிடாய் சுழற்சியின் வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்ப உட்கொள்ள வேண்டும். மாதவிடாய் சுழற்சியில் 4 சுழற்சிகள் உள்ளன. மாதவிடாய், ஃபோலிகுலர் கட்டம், ஓவ்யுலேஷன், லூட்டியல் கட்டம். ஃபோலிகுலர் கட்டத்தில் ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகளை உட்கொள்ள வேண்டும். எள் மற்றும் சூரியகாந்தி விதைகளை லூட்டியல் கட்டத்தில் உட்கொள்ள வேண்டும். இப்படி செய்து ஹார்மோன் செயல்பாட்டை சரி செய்யலாம்.

மஞ்சள்

PCOD மற்றும் PCOS நோயாளிகளுக்கு மஞ்சள் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். மஞ்சளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது ஆண்ட்ரோஜனின் அளவைக் குறைக்கிறது.

மெக்னீசியம்

ஹார்மோன் சமநிலையின்மைக்கு மெக்னீசியத்தை உணவில் சேர்க்க வேண்டும். மெக்னீசியம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சக்தி வாய்ந்தது. மெக்னீசியம் உட்கொள்வது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, சர்க்கரை அளவையும் குறைக்கிறது. மெக்னீசியம் பச்சை இலை காய்கறிகள், பாதாம் மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவற்றில் காணப்படுகிறது.

செரிமான அமைப்பு

செரிமான அமைப்பு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பது மிகவும் முக்கியம். செரிமானம் நமது ஹார்மோன்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையான வழிகளில் செரிமானத்தை சீராக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 34 கிலோவை குறைத்த 26 வயது இளைஞன்! கொழுப்பை குறைக்க உதவிய டயட் என்ன?

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும் இயற்கையான பானங்கள், ஈசியா செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News