வீட்டிலிருந்து வேலை செய்வதால் (Work from home), வீட்டை விட்டு வெளியே செல்வது மற்றும் நடப்பது மிகவும் குறைந்துள்ளது. மேலும், அலுவலகத்தில்  உள்ளது போன்ற மேஜை நாற்காலி, பிற வசதிகள், வீட்டில் இல்லாமல் இருப்பதால், மேலும் பிரச்சனை அதிகரிக்கிறது. இதன் காரணமாக கழுத்து வலி மற்றும் முதுகு வலி (Neck pain and back pain) அதிகமாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது கழுத்து மற்றும் முதுகு வலிக்கு தவறான முறையில் உட்காருவதும், ஒழுங்காக நேராக உட்காராததும் முக்கிய காரணம். இதனால், நமது கழுத்து மற்றும் பின்புற தசைகளில் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தசைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு வலிக்கத் தொடங்குகின்றது. ஆனால் இந்த வலியை நீக்க, நாற்காலியில் உடகார்ந்து கொண்டே சில எளிய பயிற்சிகளை (Stretching Exercises) செய்யலாம்.


ALSO READ | பரோட்டா பிரியர்களுக்கு ஒரு பகீர் தகவல்! மைதா எலும்புகளை பலவீனமாக்கும்; எச்சரிக்கை!


கழுத்து மற்றும் முதுகு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் பயிற்சிகள்


வீட்டிலிருந்து வேலை செய்வதாலோ அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தாலோ ஏற்படும் வலியிலிருந்து விடுபட பின்வரும் 3 பயிற்சிகளை (Stretching Exercises) செய்யலாம்.  நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே இந்த 3 விதமான பயிற்சிகள் (Stretching Exercises) செய்யப்பட வேண்டும். அவற்றைச் செய்ய அதிகபட்சம் 5 நிமிடங்கள் ஆகும்.


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


பயிற்சி 1


முதலில், நாற்காலியில் உங்கள் முதுகை நேராக இருக்கும் படி உட்கார்ந்து கொள்ள வேண்டும். உள்ளங்கால்கள் முழுமையாக தரையில் ஊன்றி வைக்கவும். இதற்குப் பிறகு, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே கொண்டு சென்று, விரல்களை ஒன்றாக கோர்க்கவும். இதற்குப் பிறகு, உள்ளங்கையை மேல் பக்கம் நோக்கித் திருப்பி, கை, கழுத்து, தோள் மற்றும் இடுப்பைபு பகுதிகளை மேல்நோக்கி இழுக்க முயற்சிக்கவும்.


பயிற்சி 2


கழுத்து வலி மற்றும் முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற, நாற்காலியில் உள்ளங்கால்களை நன்றாக தரையில் ஊன்றியிருக்கும் நிலையில் உட்காரவும். இதற்குப் பிறகு, நாற்காலியின் கைகள் வைக்கும் பகுதியில் இரண்டு கைகளை ஊன்றிக் கொண்டு. இப்போது மார்பு, தோள்கள், கழுத்து மற்றும் இடுப்பை நாற்காலியின் பின்புறம் மெதுவாக வளைக்க முயற்சி செய்யுங்கள்.


பயிற்சி 3


இந்த வலி நிவாரண பயிற்சியை செய்ய, நாற்காலியை நோக்கி நிற்கவும். இப்போது இரண்டு கால்களையும் இணைத்து, இரண்டு கைகளையும் நாற்காலியின் இரு பக்கத்திலும் வைக்கவும். நாற்காலியின் வெளிப்புறம் நோக்கி விரல்களை விரித்து, கால்களை சிறிது பின் இழுத்துச் செல்லவும், இதனால் உங்கள் இடுப்பு மற்றும் கால்களுக்கு இடையே 90 டிகிரி கோணம் உருவாகும். இப்போது உங்கள் தோள்களை கீழ் நோக்கி தாழ்த்தாமல் கைகளையும் இடுப்பையும் பின்னோக்கி இழுத்து இடுப்பை மேலே தூக்க முயற்சிக்கவும்.


பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழுப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை உடனே விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR