Tips To Control High Blood Pressure : வேகமாக நகரும் இந்த உலகில், தலையில் தேவையற்ற விஷயங்களை புகுத்திக்கொண்டு டென்ஷனை தங்கள் தலை மீது வேண்டுமென்றே சிலர் போட்டுக்கொள்கின்றனர். இதனால், சைலண்டாக உடலுக்குள் நுழையும் மனம் மற்றும் உடல் ரீதியான நோய் பாதிப்புகளானது, எதிர்காலத்தில் எமனாகவும் மாறி விடுகிறது. இப்படி இளம் வயதில் இருப்பவர்களுக்கு கூட வரும் உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மே 17ஆம் தேதியான இன்று உலக உயர் ரத்த அழுத்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்தின் தீம்-ஆக “உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடுங்கள், அதைக் கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழுங்கள்” எனும் வாசகம் இருக்கிறது. இந்த நாளில், எப்படி உயர் ரத்த அழுத்ததை குறைக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
எடை குறைப்பு:
உடல் எடை அதிகரிக்கும் சமயத்தில், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். எனவே, நீங்கள் அதிக உடல் எடையுடன் கூடியவராக இருந்தால், உறங்கும் போது மூச்சு விட சிரமமாக இருக்கும். எனவே, உடல் எடையை குறைக்க முயற்சி செய்யலாம்.
தினசரி உடற்பயிற்சி:
தினமும் நீங்கள் உடற்பயிற்சி செய்வது, உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம். தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய முயற்சிக்க வேண்டும். ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் பயிற்சி செய்வது, நடனம் ஆடுவது ஆகியவை நல்ல உடற்பயிற்சிகளாக இருக்கும். இதனுடன் சேர்த்து வாரத்தில் இரண்டு முறை ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங் செய்யவும் முயற்சி செய்யலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
ஹெல்தியான டயட்:
தினமும் முழு தானியத்துடன் கூடிய டயட்டை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக உங்களின் டயட்டில், முழு தானியத்துடன் சேர்த்து பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது, உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்பதை உங்களின் மருத்துவ ஆலோசகரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
உணவில் இருந்து நீக்க வேண்டியது:
சிறிதளவு சோடியம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்டால் கூட, உங்களது ரத்த அழுத்தம் ஏற வாய்ப்புள்ளது. பொதுவாக 2,300 மில்லி கிராம் அல்லது அதற்கும் குறைவான சோடியத்தை தினசரி எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மருத்துவர்கள், 1,500 மில்லி கிராம் அல்லது அதற்கும் குறைவாகவே உணவில் சோடியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
சிகிரெட்டை நிறுத்துவது:
புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அந்த பழக்கத்தை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமன்றி, இதய நோய்கள் வராமலும் தடுக்கும்.
மது பழக்கத்தை கை விடுவது:
மது பழக்கம் கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதனை விட்டுவிட வேண்டும். இதனால், நீங்கள் உயர் ரத்த அழுத்தத்திற்காக ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் அது உதவாமல் போய் விடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வேகமாய் எடை குறைய உதவும் காய்கறி சாறுகள்: குடிச்சி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ