உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு
சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு தொடர்பான அண்மைத் தகவல்கள்
புதுடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,91,409. இதுவரை கொரோனாவால் உலக அளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,25,470 ஆக உயர்ந்துவிட்டது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,889,330.
உலகளவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதால் அனைத்து நாடுகளிலும் "விழிப்புணர்வு" ஏற்படுத்துமாறு உலகச் சுகாதார நிறுவனம் (WHO) வலியுறுத்துகிறது.
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,48,315 ஆகவும், பலி எண்ணிக்கை 18,655 ஆகவும் உயர்ந்துவிட்டது.
இங்கிலாந்தில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் மற்றும் முடி திருத்தும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
செளதி அரேபியாவில் மசூதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு நோய்த்தொற்று அதிகரித்தது. தற்போது அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் தாண்டியது
பிரேசிலில் அன்விசா என்ற சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு COVID-19 தடுப்பூசியை மனிதர்களிடத்தில் சோதனை செய்வதற்கான ஒப்புதலைக் கொடுத்துள்ளது.
Also Read | பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை பற்றிய அரிய தகவல்கள்
கொரோனா நோய்த்தொற்று தாக்கம் கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல் இது-
1. அமெரிக்கா - 27,94,153
2. பிரேசில் - 15,39,081
3. ரஷ்யா - 6,66,941
4. இந்தியா - 6,48,315
5. பெரு - 2,95,599
Also Read | J&K Kulgam: என்கவுண்டரில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்
6. சிலி - 2,88,089
7. இங்கிலாந்து - 2,85,787
8. ஸ்பெயின் - 2,50,545
9. மெக்ஸிகோ - 2,45,251
10. இத்தாலி - 2,41,184