Weight Loss Journey: தற்போது எக்கச்சக்கமானோர் உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துகொள்கின்றனர். உடல் எடையை குறைக்க உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடுகள், தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இவை அனைத்தையும் விட ஒழுக்கமான மற்றும் தொடர்ச்சியான முயற்சியே வேண்டும் எனலாம்.
Weight Loss Journey: 40 லட்சம் வியூஸை தாண்டிய நெஸ்ஸியின் வீடியோ
நெஸ்ஸி என்ற இளம்பெண் ஒருவர் தான் விடாமுயற்சியுடன் உடல் எடையை குறைத்தது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் உடல் எடை குறைப்புக்கு முன்னர் இருந்ததையும், அதற்கு பின்னான உருமாற்றத்தையும் சேர்த்து வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அது வைரலாகி சுமார் 40 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை கடந்துள்ளது.
Weight Loss Journey: 75 கிலோவை குறைத்த நெஸ்ஸி
நெஸ்ஸி அந்த பதிவில் அவரது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து பதிவிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டில் நெஸ்ஸி 138 கிலோவில் இருந்துள்ளார். அவர் கடினமாக தொடர்ச்சியான பயிற்சியை மேற்கொண்டு 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மொத்தம் 75 கிலோவை குறைத்துள்ளார். நாள் தவறாமல் உடற்பயற்சி மேற்கொண்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு மன உறுதியுடன் செயல்பட்ட நெஸ்ஸி தற்போது 63 கிலோ எடையில் உள்ளார்.
Weight Loss Journey: எடையை குறைக்க இதுதான் காரணம்?
நெஸ்ஸி 138 கிலோவில் இருந்தபோது அவரது வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இல்லை. அவரால் எதுவுமே சுயமாக செய்ய முடியாது என்ற எண்ணமே அவரிடம் இருந்துள்ளது. ஆனால், தனது தாய் உடல் பருமானால் பல்வேறு உடல் நலப் பிரச்னைகளில் சிக்கி அவதிப்படுவதை பார்த்தே நெஸ்ஸிக்கு உடல் எடையை குறைத்து, சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. நெஸ்ஸியின் தாயார் சுமார் 140 கிலோ எடையில் இருந்துள்ளார்.
Weight Loss Journey: உடல் எடையை குறைக்க உதவிய 3 விஷயங்கள்
உடல் எடை குறைப்பில் தனக்கு உதவிய மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து நெஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார். அதில் முதல் விஷயம், இனிப்பை கைவிட்டது. அவரது தினசரி உணவுமுறையில் இனிப்பை முற்றிலும் தவிர்த்துள்ளார். இருப்பினும் வாரம் ஒருமுறை சின்ன கேக் அல்லது சாக்லேட்டை சாப்பிடுவது பெரிய பிரச்னை இல்லை என்றும் நெஸ்ஸி கூறுகிறார்.
அடுத்து காலையில் எழுந்த உடன் அவர் வெந்நீரை குடித்துதான் நாளை தொடங்குவாராம். இது அவரது செரிமானத்திற்கு உதவியதாகவும், வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவியதாகவும் அவர் கூறுகிறார். மூன்றாவது விஷயம், உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்கிறார். முதல் மாதத்தில் பெரிய மாற்றம் வரவில்லை என்றாலும் அச்சப்படாமல், பின்வாங்காமல் தொடர்ந்து உடல் எடை குறைப்பில் ஈடுபட வேண்டும் என்கிறார்.
Weight Loss Journey: உடல் ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்
இவை மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு வேறு சில விஷயங்களையும் நெஸ்ஸி பகிர்ந்துகொண்டார். முடிந்தளவு வெளியில் சமைக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டுமாம். சாப்பாட்டில் காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டுமாம். முடிந்தவரை நீங்கள் சாப்பிடும் உணவுகளில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டுமாம்.
அவர் தினமும் சரியான நேரத்திற்கு உணவை சாப்பிடுவாராம். காலையில் 9 மணிக்கு, மதிய உணவு 1.30 மணிக்கு, இரவில் 8.30 மணிக்கு சாப்பிடுவாராம். தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பாகவே சாப்பிட்டுவிடுவாராம். தினமும் 8-12 கிளாஸ் தண்ணீர் குடிப்பாராம். பழங்கள், நட்ஸை நொறுக்குத் தீனியாக வைத்துக்கொண்டு, வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டுமாம். அதேபோல், மெதுவாக நன்றாக மென்று சாப்பிட வேண்டுமாம், இது அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க உதவுமாம். மேலும், மொபைலில் படம் பார்த்துக்கொண்டோ, தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் நெஸ்ஸியின் உடல் எடை குறைப்பு அனுபவம் ஆகும். இதை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 160 கிலோ டூ 85 கிலோ.. குறைத்தது எப்படி? ரகசியம் பகிர்ந்த 24 வயது இளைஞர்!
மேலும் படிக்க | தொப்பை போட்ட ரித்திகா சிங்... 3 மாதங்களில் வெறித்தனமாக வெயிட் லாஸ் செய்தது எப்படி?
மேலும் படிக்க | 22 கிலோவை குறைத்த 42 வயது 'இளைஞர்'... உடல் எடை குறைத்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ