122 கிலோவை இருந்த இளைஞர்... 33 கிலோவை குறைக்க ஸ்பெஷலாக செய்தது என்ன?

Weight Loss Journey: 122 கிலோவில் இருந்த இளைஞர் ஒருவர் 2 வருட தொடர் முயற்சியால் 33 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 16, 2025, 07:41 AM IST
  • 2023 ஜனவரியில் 122 கிலோவில் இருந்திருக்கிறார்.
  • கடந்த 26 மாதங்களில் அவர் தொடர்ந்து செயல்பட்டுள்ளார்.
  • தற்போது 2025 மார்ச் மாதத்தில் 89 கிலோவுக்கு வந்துள்ளார்.
122 கிலோவை இருந்த இளைஞர்... 33 கிலோவை குறைக்க ஸ்பெஷலாக செய்தது என்ன?

Weight Loss Journey: உடல் பருமனுடன் இருப்பது உடல் அளவில் எந்தளவிற்கு பிரச்னை இருக்குமோ, அதேபோல் மனதளவிலும் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். நமக்கு நெருக்கமானவர்கள் கூட 'உடம்ப குறைக்க வேண்டியதுதான...', 'உடம்ப குறைச்சா நச்சுனு இருப்ப...' போன்ற வார்த்தைகளை உதிர்க்காமல் இருக்க மாட்டார்கள்.

Add Zee News as a Preferred Source

இது அக்கறை தானே என்று எளிதாக கூறிவிடலாம். ஆனால், உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு இதனை கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இருக்காது. ஏற்கெனவே, உடல் பருமனால் சிலர் நம்பிக்கை குறைந்து காணப்படுவார்கள். அவர்களிடம் இத்தகைய சொற்கள் மேலும் பிரச்னையை உண்டாக்க வாய்ப்புள்ளது.

Weight Loss Journey: 33 கிலோவை குறைத்த ஷிகர்

அந்த வகையில், இதுபோன்ற பேச்சுக்களை இளம் வயதிலேயே எதிர்கொண்ட ஒருவர் விடாப்பிடியாக முயன்று தற்போது உடலை மொத்தமாக உருமாற்றி, உடல் பருமனில் இருந்து விடுபட்டுள்ளார். ஷிகர் கபாசியா என்ற  24 வயது இளைஞர் 122 கிலோவில் இருந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து முயன்று தற்போது 89 கிலோவுக்கு வந்துள்ளார். அதாவது, 26 மாதங்களில் 33 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். 

இதுகுறித்து ஷிகர் பேசுகையில்,"நான் எனது உடல்நலம் குறித்து 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்கறை எடுத்துக்கொண்டேன், அப்போது நான் 122 கிலோவில் இருந்தேன். இப்போது 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எனது உடல் எடையை 89 கிலோவுக்கு கொண்டுவந்துள்ளேன். அதாவது, 26 மாதங்களில் எவ்வித குறுக்கு வழிகளையும் பின்பற்றாமல் 33 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன்" என்றார்.

Weight Loss Journey: உடல் எடையை குறைப்பதில் இருந்த சிக்கல்கள்

தனது உடல் எடை குறைப்பு அனுபவம் குறித்து பேசிய அவர்,"டக்கென உடல் எடையை குறைப்பது என்பது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். எனவே, தொடக்கத்தில் இருந்தே எனது வாழ்க்கை முறையில் நிலையான ஒரு முழுமையான மாற்றத்தைக் கொண்டுவருவதிலேயே கவனம் செலுத்தினேன்" என்றார்.

மேலும், உடல் எடையை குறைப்பதில் அவர் சந்தித்த சவால்கள் குறித்தும் பேசினார். "எனக்கு 4 வயதில் இருந்தே செலியாக் நோய் இருக்கிறது. அதனால், என் செரிமான அமைப்பு எப்போதும் சென்சிடிவாகவே இருந்து வருகிறது. நான் கவனமாக எனது உணவுகளை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. பல உயர் புரோட்டின் பவுடர்கள் எனது உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

Weight Loss Journey: சாப்பிடுவதை பதிவு செய்யுங்கள்

மேலும், அதிகப்படியான தகவல்கள் இணையத்தில் இருப்பதும் ஒரு பெரிய பிரச்சனை தான். கிட்டத்தட்ட ஒவ்வொருவருக்கும் நமக்கு வழங்க நிறைய ஆலோசனைகள் உள்ளன. மேலும் சமூக ஊடகங்களிலும் நிறைய தகவல்கள் உள்ளன. அவற்றையெல்லாம் புறந்தள்ளி சமாளிக்க நான் கஷ்டபட்டேன்" என்கிறார். உணவு பதிவுகள், செயலிகள் மூலம் அவர் உண்ணும் உணவுகளை தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார். இதனால் எவ்வளவு சாப்பிடுகிறோம், எதை சாப்பிடுகிறோம் என்ற புரிதல் அவருக்கு இருந்திருக்கிறது. தினமும் உடல் எடையை சோதித்து அதையும் பதிவு செய்து வந்துள்ளார்.

Weight Loss Journey: உணவுமுறையும், உடற்பயிற்சியும்...

மேலும், சர்க்கரை கொண்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்ததாகவும், அதன்பிறகு தனது ஆற்றல் அளவிலும், ஒட்டுமொத்த தோற்றத்திலும் பெரிய வித்தியாசத்தை கண்டேன் எனவும் ஷிகர் தெரிவித்தார். தினமும் உணவு போக, அவ்வப்போது நொறுக்குத்தீனிகளையும் அவர் உட்கொண்டுள்ளார், ஆனால் அதிலும் புரதச்சத்து அதிகம் இருக்கும் வகையில் அவர் பார்த்துக்கொண்டுள்ளார். 

தினமும் 3-3.5 லிட்டர் தண்ணீரை குடித்து வந்துள்ளார், மேலும் உடற்பயிற்சிக்கு முன்னர் கடுங்காபி குடிக்கும் பழக்கத்தையும் அவர் வைத்திருக்கிறார். பல்வேறு வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொண்ட இவர் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை 10 மாதங்களுக்கு குத்துச்சண்டை பயிற்சிக்கு சென்றுள்ளார், இதுவும் உடல் எடை குறைப்பில் அவருக்கு உதவியிருக்கிறது. வாரத்திற்கு மூன்று நாள்கள் கார்டியோவும் அவர் மேற்கொள்வாராம். தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸை கடந்துள்ளார். 

Weight Loss Journey: புரதம் முக்கியம் பிகிலு

கீட்டோ டயட், இன்டர்மிடென்ட் பாஸ்டிங் என பல உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றினாலும் அவருக்கு எதுவும் இறுதிவரை பயனளிக்கவில்லையாம். கலோரிகளை கணக்கிடுவது மற்றும் சாப்பாட்டில் கவனம் செலுத்தியதே உதவியுள்ளது. மேலும், அவரது புரோட்டின் எடுத்துக்கொள்வதில் அதிக கவனம் எடுத்துள்ளார். அதாவது உடல் எடையின் ஒரு கிலோவுக்கு 1.6 கிராம் புரதம் என்ற ரீதியில் அவர் உட்கொண்டுள்ளார். பல விஷயங்களை பின்பற்றுவதற்கு பதில் ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக பின்பற்றுவது பயனளிக்கும் என்கிறார்.

Weight Loss Journey: உடல் எடையை குறைப்புவர்களுக்கு...

உடல் எடை குறைப்பில் ஈடுபடுவோருக்கு ஷிகர் கூறும் அறிவுரை என்னவென்றால்,"முதல் சில வாரங்கள் மிகவும் கடினமாகவே இருக்கும். ஆனால் நீங்கள் முடிவுகளை பெற்று அதனை அனுபவித்து சுகம் கண்ட பிறகு நீங்கள் இதை நிறுத்த விரும்ப மாட்டீர்கள். உடல் எடை குறைப்பு உண்மையில் எளிது. நாம் அதை பெரிதாக்குகிறோம். உங்கள் உணவைப் பதிவுசெய்யுங்கள், தினமும் உடலை இயக்கத்தில் வையுங்கள், இரண்டு வாரங்கள் பின்பற்றுங்கள். அந்த உந்துதல் தொடர்ச்சியாக செயல்பட வைக்கும்" என்கிறார். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஷிகர் கபாசியாவின் தனிப்பட்ட உடல் எடை குறைப்பு அனுபவம். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | 145 கிலோவில் இருந்த இன்ஸ்டா பிரபலம்... 75 கிலோவுக்கு குறைத்தது எப்படி?

மேலும் படிக்க | 106 கிலோவில் இருந்த பெண்... ஒரு ஆண்டிலேயே 50 கிலோவை குறைத்தது எப்படி தெரியுமா?

மேலும் படிக்க | சாப்பாட்டில் கவனமாக இருந்து... 12 வாரங்களில் கொழுப்பை குறைத்த பெண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News