ஸ்டெர்லைட் ஆலையை மூட விரைவில் நடவடிக்கை -எடப்பாடி பழனிசாமி!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையால் தமிழகமே போர்களமாக காட்சியளிகின்றது. இந்நிலையில், தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது.....!
சட்டமன்ற வளாகத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது திட்டமிட்ட நாடகம். வேண்டுமென்றே அரசியல் நாடகத்தை நடத்துகிறார் ஸ்டாலின். அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் போராட்டம் நடத்துகின்றார்.
அலுவல் ஆய்வுக் கூட்டம் தொடங்கிய உடன் எதிர்கட்சித் தலைவர் உள்ளே தான் இருந்தார். வேண்டுமென்றே திட்டமிட்டு தர்ணா போராட்டம் நடத்தினார். ஸ்டாலினை சந்திக்க நான் மறுத்ததாகப் கூறியது முற்றிலும் தவறு. அவர் என்னிடம் சந்திக்க நேரம் கேட்கவே இல்லை. தவறான செய்தியை ஊடகங்களுக்கு ஸ்டாலின் அளித்துள்ளார் என தெரிவித்தார்.
தொடர்ந்து ஸ்டெர்லைட், போராட்டம் குறித்து பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதே ஸ்டெர்லைட் ஆலைக்கான உரிமையை ரத்து செய்தார். இத்தனை பேர் உயிர் இழந்தது வருத்தம் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மாசுகட்டுப்பாட்டுவாரியம் அனுமதி இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது.
போராட்டத்தில் சில அரசியல் கட்சிகள் ஊடுருவி கலவரத்தை ஏற்படுத்திவிட்டனர். வேண்டுமென்றே எதிர்கட்சியினரும் சில அமைப்பினரும் அப்பாவி மக்களை தூண்டி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என செய்தியாளர்களிடம் தமிழக முதலவர் தெரிவித்தார்.