)
Independent Bank Accounts For Minors: சிறுவர்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி ஒரு சிறப்பான முன்னெடுப்பை அறிவித்திருக்கிறது. அதாவது, 10 வயது மற்றும் 10 வயதை தாண்டிய சிறுவர்கள் இனி வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Bank News: ஜூலை 1ஆம் தேதி முதல்...
ஆம், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, 10 வயது மற்றும் 10 வயதை தாண்டிய சிறுவர்கள் சேமிப்பு கணக்கு மற்றும் Term டெபாசிட் கணக்கையும் சுதந்திரமாக நிர்வகித்துக்கொள்ளலாம். இந்த உத்தரவை ரிசர்வ் வங்கி நேற்று பிறப்பித்துள்ளது. இதன்மூலம், சிறுவர்களும் நிதி செயல்பாடு பழக்கத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதற்காக வங்கிகளுக்கு புதிய வழிமுறைகளை கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் 2025ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இதனை வங்கிகள் நடைமுறைப்படுத்தும்.
Bank News: சுதந்திரமாக கணக்கை நிர்வகிக்கலாம்
புதிய விதியின்படி, 10 வயது அல்லது 10 வயதை தாண்டிய சிறுவர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எவ்வித தலையீடும் இன்றி தனியாக, சுதந்திரமாக வங்கிக் கணக்கை திறந்து, அதனை நிர்வகித்துக் கொள்ளலாம். வங்கியின் இடர் மேலாண்மை கொள்கையை ஒத்து, இவர்களுக்கு கணக்குகள் ஒதுக்கப்படும்.
இந்த நடைமுறை இருந்தாலும், தாய், தந்தை மற்றும் பாதுகாவலரின் உதவியோடு கணக்குகளை தொடங்கும் நடைமுறைகளும் தொடரும் என தெரிகிறது. சிறுவர்கள் 18 வயதை அடையும் வரை, வங்கிகள் கணக்குப் பதிவுகளில் உள்ள செயல்பாட்டு வழிமுறைகள், மாதிரி கையொப்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
Bank News: மினிமம் பேலன்ஸ் கிடையாது
வாடிக்கையாளருக்கு ஏற்ற வகையில், இணைய வங்கி சேவை, டெபிட் கார்டுகள் அல்லது காசோலை புத்தகங்கள் போன்ற கூடுதல் சேவைகளை வங்கிகள் வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள் வங்கி கணக்கு சுதந்திரமாக நிர்வகித்தாலும் சரி, பாதுகாவலர் மூலம் நிர்வகித்தாலும் சரி, அதற்கு மினிமம் பேலன்ஸ் ஆப்ஷன் கிடையாது. அதாவது, பூஜ்யத்திற்கு கீழ் மைனஸ் ஆகாது.
Bank News: தற்போதைய நடைமுறை என்ன?
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு முன்னர் வரை, சிறுவர்கள் வங்கியில் சேமிப்புக் கணக்குகளை திறக்க வேண்டும் என்றால், அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமே செய்ய வேண்டியிருந்தது. சிறுவர்கள் சார்பாக பாதுகாவலர் கணக்கை இயக்குவார்.
மைனர்கள் 18 வயதை அடையும் வரை, அவர்கள் தங்கள் கணக்குகளை சுதந்திரமாக நிர்வகிக்க இயலாது. மேலும் டெபிட் கார்டுகள் அல்லது இணைய வங்கி சேவை போன்ற பிற வங்கி வசதிகள் பொதுவாக மைனர்களுக்கு வழங்கப்படாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ