)
NEET Student Saved By Student : ஒரு மாணவி, தவறான முடிவு எடுக்கச்சென்ற போது சிலர் அலர்ட் செய்ததால், அந்த மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெய்ப்பூரில் உள்ள மகேஷ் நகரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கிருக்கும் ஒரு, பெண்கள் தங்கும் விடுதியில், ஒரு பெண், கோச்சிங் சென்டர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஏறி நின்று தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்.
சாலையில் செல்பவர்கள் அந்தப் பெண் பாதுகாப்பின்றி அப்படி நிற்பதை பார்த்து, கோச்சிங் சென்டர் இருக்கும் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் அலர்ட் ஆன ஆசிரியர்கள், அந்தப் பெண் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
அந்தப் பெண் யார் எவ்வளவு பேசியும் கீழே இறங்க மறுத்திருக்கிறார். இதையடுத்து அவர் சரியாக குதிக்கும் சமயத்தில், ஆசிரியர் ஒருவர் அந்த பெண்ணை பின்னால் இருந்து பிடித்து உள்ளே இழுத்து இருக்கிறார். அந்தப் பெண் இவ்வளவு முயற்சித்தும் அவர் பிடியிலிருந்து அவரால் விடுபட முடியாதபடி பிடித்திருக்கிறார்.
அந்தப் பெண் பின்பு பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டு, தகுந்த மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்க பட்டதாக கூறப்படுகிறது.
காரணம் என்ன?
மாணவி, இப்படிப்பட்ட ஒரு முடிவெடுப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் நீட் கோச்சிங் சென்டர் படிக்கும் மாணவி என்றும் சமீபத்தில் அந்த கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட சில தேர்வுகளை அந்த மாணவி, எழுதவில்லை என்றும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்று, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் படிக்கும் கல்வி நிலையத்திற்கு வந்து அவரது படிப்பு குறித்து விசாரித்திருக்கின்றனர். இதற்குப் பிறகு சோகமாக காணப்பட்ட அந்த பெண், மாடிக்கு சென்றதாக கூறப்படுகிறது. நீட் பயத்தால் போக இருந்த இன்னொரு உயிர், இப்போது காப்பாற்றப்பட்டிருப்பது குறித்து, பலரும் பேசி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ