ஸ்ரீநகர்: துணை ராணுவ படையின் மீதான தாக்குதலில் தொடப்புடைய பயங்கரவாதிகள் இருவர் பிடிப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர், பானிஹால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையினில் இன்று காலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இரண்டு பயங்கரவாதிகள் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரகம் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


விசாரணையில், அவர்கள் ஆரிப் மற்றும் கசான்பர் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், இவர்கள் கடந்த 20-ம் தேதி துணை ராணுவ படை மீது தாக்குதல் புரிந்தவர்கள் எனவும் தெரியவந்ததுள்ளது.


இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று காலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பானிஹால் பகுதியை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த தேடுதல் வேட்டை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.