இன்றைய நவீன உலகில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக மக்கள் சிலர் ஆபத்தான முயற்சிகளை கையில் எடுக்கின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்க்காக பல விநோதமான செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பிரபலமடைய வேண்டும் என்பதறக்காக, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், நடுரோட்டில் நாற்காலியை போட்டி அதில் அமர்ந்து டீ அருந்தி உள்ளார். போக்குவரத்து மிகுந்த சாலையில் ஆபத்தை உணராமல் இச்செயலை செய்துள்ளார்.
பெங்களூரு தும்கூர் சாலையில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோ அருகே நந்தினி லேஅவுட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் பிரசாந்த் என்ற சிம்பு. இவருக்கு வயது 25. இவர் சரக்கு வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் simbu_star_143 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் பிரபலமடைந்த இவர் கிட்டத்தட்ட 13,000 ஃபாலோயர்களை வைத்துள்ளார்.
இந்த நிலையில், பிரசாந்த் என்ற சிம்பு பெங்களூருவின் பரபரப்பான சாலை நடுவில் நாற்காலி போட்டு அமர்ந்து டீ அருந்தும் படி வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக பதிவிட்டுள்ளார். இவர் இந்த வீடியோவை கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி பதிவேற்றம் செய்த நிலையில், விரைவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து இந்த விநோத வீடியோவை பார்த்த போலீசார் விசாரணை நடத்தி பிரசாந்த்தை கண்டு பிடித்தனர்.
பின்னர் பொதுமக்களின் ஆபாத்தை விளைவித்ததற்காகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக சாலையில் ஸ்டண்ட் செய்ததற்காகவும் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பெங்களூரு போலீசார் பதிவிட்டு, போக்குவரத்திற்கு இடையூறு செய்வது தவறு என்றும் அப்படி இடையூறு செய்தால் மிகப்பெரிய அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர். பிரபலமடைய வேண்டும் என்பதற்காக ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இது தங்களுக்கு மட்டும் ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிங்க: காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் யூடியூபர்! வெளியான சிசிடிவி காட்சிகள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ