ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீரென கொடூர தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு மறைமுக தாக்குதலை நடத்தி வந்தது.
இச்சூழலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்தியா நேரடி தாக்குதலை தொடங்கியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தரைமட்டமாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
பாகிஸ்தானும் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நேற்று முதல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற எல்லை பகுதிகளில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கிட்டத்தட்ட இரு நாடுகளுக்கும் இடையேயான போர் உறுதியாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று (மே 09) இரவு பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூரில் உள்ள குடியிருப்பு மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் குடியிருப்பில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் மூவரும் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: 1971 IND PAK போர்: காணாமல் போன 54 இந்திய வீரர்கள்... இன்று வரை விலகாத மர்மம்!
மேலும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் போர்: ஏடிஎம், யுபிஐ வங்கி சேவைகளுக்கு தடையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ