டெல்லியில் கடும் பனிமூட்டம்: 30 ரயில்கள் தாமதம்!
டெல்லியில் காலை வேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக டெல்லியில் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 30 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக 30 ரயில்கள் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக சாலையில் குறைந்த தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதையடுத்து, 10 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. டெல்லியில் இன்று குறைந்த பட்ச வெப்ப நிலை 11 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று, தலைநகர் பகுதியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியிருந்தது. கடந்த சில நாட்களாக டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக அதிகாலை வேளையில் வாகன விபத்துக்கள் ஏற்படுவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக மாறியுள்ளது.