கொரோனா தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு மக்கள் இடையே பரவ தொடங்கியது. 2022ஆம் ஆண்டு வரை இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளையே ஒரு வழி ஆக்கியது. இந்த பெருந்தொற்றால், பெருளாதார சரிவில் சிக்கிக்கொண்ட நாடுகளில் பல நாடுகள் தனது பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர முடியவில்லை,.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், மீண்டும் பரவ தொடங்கி உள்ளது கொரோனா தொற்று. ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் பரவி வந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவ்ரை சுமார் 4302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மே மாத தொடங்கம் முதல் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ளது. குறிப்பாக கேரள மாநிலம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் மாஸ்க் அணிய மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவ்ரை இந்தியாவில் 4302 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 44 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் 4 பேரும் தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் என 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று (ஜூன் 030 76 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. பாதிகப்பட்ட 216 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா பரவலால் பதற்றப்பட வேண்டாம். மத்திய சுகாதாரத்துறையும் இதைதான் கூறி வருகிறது என்றார்.
நாட்டிலேயே கேரள மாநிலத்தில் தான் தொற்று அதிகமாக உள்ளது. எனவே சளி, தொண்டை வலி, இருமல், மூச்சு திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், காட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் பொது இடங்களுக்கு செல்லும் போது, கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: பதஞ்சலி இயற்கை சிகிச்சைகள்... உடல் பிரச்னைக்கு பயனுள்ள தீர்வு - ஏன்?
மேலும் படிங்க: பண்டைய நடைமுறையை நவீன அறிவியலுடன் எவ்வாறு இணைகிறது பதஞ்சலி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









