)
75 Year Old Man Dies Day After Second Marriage : 35 வயது பெண்ணை, இரண்டாவதாக திருமணம் செய்த 75 நபர் உயிரிழந்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதையும், அவர் எப்படி இறந்தார் என்பதையும் இங்கு பார்ப்போம்.
தன் வயதில் பாதியுள்ள பெண்ணுடன் திருமணம்!
உத்தர பிரதேசத்தின் ஜான்பூரில்தான் இந்த சம்பவமானது நடந்துள்ளது. குச்முச் எனும் பகுதியில், தனது மனைவி இறந்த பின்பு ஓராண்டாக 75 வயது சங்குருராம் என்கிற நபர் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு, குழந்தைகள் யாரும் கிடையாது. வயிற்று பிழப்பிற்கு விவசாயம் செய்து வந்துள்ளார்.
மனைவியை இழந்த பின்பு, இவர் தனிமையில் வாடி வந்ததாக கூறப்படுகிறது. இதை போக்குவதற்காக அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டுள்ளார். தனது விருப்பத்தை உறவினர்களிடமும் தெரிவித்திருக்கிறார்.
இதை கேட்ட அவரது உறவினர்கள் சிலர் இதனை ஆதரித்துள்ளனர். “75 வயதில் திருமணம் தேவையா?” என்று சிலர் கேட்டுள்ளனர். கிராமத்தினர் சிலரும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
தீவிர பெண் வேட்டைக்கு பிறகு, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி (திங்கட்கிழமை), 35 வயது பெண் மனபாவதி என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.
திருமணம் ஆன மறுநாளே உயிரிழப்பு!
மனபாவதிக்கும், இது இரண்டாவது திருமணம் ஆகும். முதல் கணவருடன் சேர்ந்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். வயதில் இவ்வளவு பெரியவரை திருமணம் செய்ய ஏன் ஒப்புக்கொண்டாய்? என்று பிறர் கேட்ட போது அதற்கு அவர், தான் வீட்டை பார்த்துக்கொள்வதாக அவருக்கு சத்தியம் செய்து கொடுத்ததாகவும், தன் குழந்தைகளை அவர் பார்த்துக்கொள்வதாக சொன்னதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
தங்கள் திருமணம் நடந்த இரவன்று தாங்கள் இருவரும் நிறைய பேசிக்கொண்டு இருந்ததாகவும், வாழ்க்கை குறித்த பல முக்கியமான விஷயங்கள் குறித்து தான் கூறியதாகவும் மனபாவதி தெரிவித்திருக்கிறார்.
காலையில், சங்குருராமின் உடல் நிலை திடீரென மாறியிருக்கிறது. பின்னர் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். இவரது உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
இறுதிசடங்கு நிறுத்தம்:
75 வயது முதியவரான சங்குருராம், எப்படி திடீரென உயிரிழந்தார் என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து கிராமத்தினர் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இந்த முதியவரின் முக்கிய உறவினர்கள் சிலர் டெல்லியில் இருக்கின்றனர். அவர்களுக்கும் இந்த உயிரிழப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இறுதிசடங்குகளை நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். இது குறித்த அப்டேட்ஸ் அடிக்கடி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ