)
79வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக அவர் கூறினார்.
அவர் பேசியதாவது, நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. சீர்திருத்தம் செய்வதன் மூலம் சிறு, குறு தொழில்கள் பயனடையும். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான நிதி மேம்படுத்தப்படும். வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் 3.5 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள். இளைஞர்களுக்காக ரூ. 1 லட்சம் கோடியில் புதிய திட்டத்தை தொடங்குகிறோம். பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா என்ற இந்த புதிய திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் தனியார் துறையில் முதல் முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு அரசு ரூ. 15,000 வழங்கும்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பியுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். விரைவில் இந்தியா சொந்தமாக விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தை அமைக்கம். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன என பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ