)
79th Independence Day: 79வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் சிந்து நதி நீர் இந்திய விவசாயிகளுக்கே என கூறினார்.
அவர் பேசியதாவது, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி எல்லைக்கு பங்கரவாதிகள் பகல்காமில் மக்களை கொன்று குவித்தனர். அவர்களின் மதத்தை கேட்ட பிறகு மக்களை கொன்றனர். இதனால் முழு இந்தியாவும் சீற்றமடைந்தது. ஆப்ரேஷன் சிந்தூர் என்பது அந்த சீற்றத்தின் வெளிப்பாடாகும். அந்த தாக்குதலுக்கு பிறகு நமது ஆயுத படைகளுக்கு நாங்கள் சுகந்திரம் கொடுத்தோம். அவர்கள் எதிரி மண்ணுக்குள் பல கிலோமீட்டர்கள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத தலைமையகத்தை தரைமட்டமாக்கினார்கள். பாகிஸ்தானின் பாதிப்பு அதிகம்.
ஆப்ரேஷன் சிந்தூர் வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். பகல்காமில் அப்பாவி மக்களின் மதத்தை கேட்டு கொன்ற பயங்கரவாதிகளுக்கு, நம் நாட்டு ராணுவத்தினர் தக்க பதிலடியை கொடுத்தனர். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது. எதிரிகள் மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், அதற்கான பதிலை நமது ராணுவத்தினர் கொடுப்பார்கள். எங்கு எப்போது தாக்குதல் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். சிந்து நதி நீரை முழுவதுமாக பயன்படுத்தும் உரிமை இந்திய விவசாயிகளுக்கே உள்ளது. தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக ஓடாக்கூடாது. எதிரி நாட்டு விவசாய நிலங்களுக்கு நமது தண்ணீர் கிடைக்க கூடாது. அதனாலேயே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தோம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ