8th Pay Commission: சம்பள உயர்வில் அதிரடி மாற்றம் வருமா? மத்திய அரசு தகவல்!

8-வது ஊதிய குழு அமைக்கப்பட்டதிலிருந்தே, சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) எவ்வளவு உயர்த்தப்படும்? என்பது குறித்து பலவிதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. 

Written by - RK Spark | Last Updated : Dec 14, 2025, 08:33 AM IST
  • 8-வது ஊதியக் குழு.
  • சம்பள உயர்வில் அதிரடி மாற்றம் வருமா?
  • மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
8th Pay Commission: சம்பள உயர்வில் அதிரடி மாற்றம் வருமா? மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம், 8-வது ஊதியக் குழுவின் (8th Pay Commission) பரிந்துரைகள். இந்நிலையில், சம்பள உயர்வு கணக்கீடு மற்றும் அமலாக்கம் குறித்து முக்கிய தகவல் ஒன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழுவுக்கு பின் அகவிலை நிவாரணம் உயருமா? ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்

சமூக வலைதள வதந்திகள் vs உண்மை நிலை

8-வது ஊதிய குழு அமைக்கப்பட்டதிலிருந்தே, சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) எவ்வளவு உயர்த்தப்படும்? என்பது குறித்து பலவிதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. ஆனால், இந்த ஊகங்கள் அனைத்தும் தவறாக இருக்க வாய்ப்புள்ளது என்று அரசு தரப்பில் சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8, 2025 அன்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, "8-வது மத்திய ஊதிய குழு, தனது பரிந்துரைகளை வகுப்பதற்காக சொந்தமாக ஒரு புதிய வழிமுறையையும் நடைமுறையையும் உருவாக்கும்" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதன் மூலம், முந்தைய ஊதிய குழுக்களின் முறையே இதிலும் பின்பற்றப்படும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்பது தெளிவாகிறது.

7-வது ஊதியக் குழுவின் பாணி

  • ஒவ்வொரு ஊதிய குழுவும் முந்தைய குழுவின் அணுகுமுறையை மாற்றியமைப்பது வழக்கமான ஒன்றுதான்.
  • உதாரணமாக, 7-வது ஊதிய குழு வந்தபோது, அதுவரை நடைமுறையில் இருந்த Pay Bands மற்றும் Grade Pay முறையை முற்றிலுமாக நீக்கியது.
  • அதற்கு பதிலாக, Pay Matrix என்ற புதிய மற்றும் எளிமையான முறையை அறிமுகப்படுத்தியது. மேலும், 50-க்கும் மேற்பட்ட தேவையற்ற Allowances ரத்து செய்தும், சிலவற்றை இணைத்தும் பெரிய மாற்றங்களை கொண்டுவந்தது.
  • அதே பாணியில், தற்போது அமைக்கப்பட்டுள்ள 8-வது ஊதியக் குழுவும் புதிய சூத்திரத்தைக் கையில் எடுக்கலாம். எனவே, பழைய கணக்கீட்டு முறைகளை வைத்து இப்போது வெளியாகும் கணிப்புகள் அனைத்தும் உண்மையாக இருக்காது.

காலதாமதம் மற்றும் ஊழியர்களின் கவலை

8-வது ஊதிய குழுவின் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்தும், அதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் எழுந்துள்ள குறைகள் குறித்தும் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், "அனைத்து விதமான கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் 8-வது ஊதியக் குழுவே ஆய்வு செய்து பதிலளிக்கும்" என்று தெரிவித்தார். புதிய ஊதிய குழு தனது ஆய்வுகளை முடித்து, முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க சுமார் 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பொறுத்திருப்பது அவசியமாகிறது. இந்த முறை பணவீக்கத்தைக் (Inflation) கருத்தில் கொண்டு அடிப்படை ஊதியம் கணிசமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அகவிலைப்படி (DA) கணக்கீட்டிலும் மாற்றங்கள் வரலாம். எது எப்படியிருந்தாலும், புதிய ஊதியக் குழு வகுக்கும் அந்த "புதிய வழிமுறை" மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமானதாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா? அரசு ஊழியர்களுக்கு அமைச்சரின் முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News