ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்த்த 35 பேர் பத்ராசலம் பகுதியில் உள்ள ராமர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய தனியார் பேருந்தில் சென்றுள்ளனர். இந்த சூழலில், சாமி தரிசனத்தை முடித்த அவர்கள் பின்னர் அன்னாவரம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தத நிலையில், சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது.
9 பேர் பலி, 15க்கும் மேற்பட்டோர் காயம்
இந்த விபத்து இன்று (டிசம்பர் 12) நடந்தது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சித்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அம்புலன்ஸ் மூலம் பத்ராசலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைந்தனர். மேலும், தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கள்
இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனையளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
நிவாரண தொகை அறிவிப்பு
இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் PMNRF இலிருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பிரதமர் மோடியின் 6 காஸ்ட்லி கார்கள்.. எவ்வளவு தெரியுமா? எல்லாமே கோடிகள்தான்!
மேலும் படிக்க: இந்தியாவில் அதிக 'குடிமகன்கள்' உள்ள மாநிலம் எது? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









