Bengaluru man arrested for sending obscene video to TV actress: பிரபல பெங்களூரு based சின்னத்திரை நடிகைக்கு சமூக வலைதளங்களில் இடம்பெற்ற தொடர்ச்சியான துன்புறுத்தல் சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபர்
41 வயதுடைய இந்த நடிகை கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரைத் தொடருகளில் பிரபலமாக நடித்தவர். இவர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்டாக பயன்படுத்துகிறார். இந்த நிலையில், சமீப காலத்தில், பேஸ்புக் மூலம் ஒரு நபர் இவருக்கு ஆபாசமான குறுஞ்செய்தியையும், வீடியோக்களையும் அனுப்பி அவருக்கு தொடர்ந்து தொந்தரவுகளை ஏற்படுத்தி உள்ளார். இதில் அந்த நபர் தனது அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து அனுப்பி, இளம்பெண்ணின் மனநலத்தை பாதித்துள்ளார்.
நடிகை முதலில் அந்த நபரை 'பிளாக்' செய்திருக்கிறார். இருப்பினும் அவர் தொடர்ந்து வெவ்வேறு புதிய பேஸ்புக் முகவரிகள் மூலம் தொடர்ச்சியான தொந்தரவுகள் செய்துள்ளார். கடந்த 1ஆம் தேதி, அந்த நபர் மீண்டும் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினார். அப்போது, நடிகை "நாகரபாவி 2வது ஸ்டேஜில் நந்தன் பேலாஜில் சந்திக்கலாம். வர முடியுமா?" என பதிலளித்தார். இதனைப் பார்த்து பயந்த அவர் மறுத்துள்ளார். நடிகை மீண்டும் ஆபாசமாக மெசேஜ் அனுப்ப வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார். ஆனால் கேட்காமல் தொடர்ந்து ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி உள்ளார்.
இதனால் நடிகை பெங்களூர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரை கைது செய்தனர். விசாரணையில் குற்றவாளியின் பெயர் நவீன் கே மோன் என தெரியவந்தது. இவர் குளோபல் டெக்நாலஜி என்ற நிறுவத்தில் டெலிவரி மேனேஜராக பணியாற்றி வருகிறார். அவரது அலுவலகங்கள் லண்டன், பாரிஸ், பெர்லின், நியூயார்க் போன்ற நகரங்களிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் பெங்களூருவில் மற்றொரு சம்பவமும் அரங்கேறி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக சனிக்கிழமை 33 வயது பெண் தனது நாயுடன் காலை நேரத்தில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, 30 வயது மதிக்கத்தக்க ஒரு அடையாளம் தெரியாத நபர், அவரை பின் தொடர்ந்து மேடம் என அழைத்துள்ளார். அவர் திரும்பி பார்த்தபோது, அந்த நபர் அவர் முன் சுய இன்பம் செய்ய தொடங்கியதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற சம்பவங்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
மேலும் படிக்க: ரூ.21 கோடி மதிப்பிலான எருமை உயிரிழப்பு! கண்காட்சியில் நேர்ந்த அதிர்ச்சி..
மேலும் படிக்க: ஒரு வருடத்திற்கு ChatGPT Go முற்றிலும் இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









