பிரபல ஹிந்தி கதாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

பிரபல ஹிந்தி கதாசிரியர் ரவிஷங்கர் அலோக், மன அழுத்தம் காரணமாக தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Updated: Jul 12, 2018, 01:52 PM IST
பிரபல ஹிந்தி கதாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
Image Courtesy: Pixabay image used for representation purpose only.

பிரபல ஹிந்தி கதாசிரியர் ரவிஷங்கர் அலோக், மன அழுத்தம் காரணமாக தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகர் நானா படேகர்நடித்த 'அப் டக் சாப்பான்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் பல மடங்கு வசூல் சாதனை படைத்தது.

 இந்த படத்தில் கதாசிரியராக பணியாற்றியவர் 32 வயதுதான ரவிஷங்கர் அலோக், இந்த படத்தை தொடர்ந்து பல பாலிவுட் வெற்றி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் மன அழுத்ததில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து நேற்று ரவிஷங்கர் அலோக், யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் மதியம் 2 மணி அளவில் மும்பை அந்தேரியில் உள்ள அவருடைய வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவர் வீட்டின் காவலாளி கொடுத்த, புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்.