)
New AC Rules: உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தால் அதிக வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த ஆண்டு கோடை மாதம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனை சமாளிக்க முடியாமல் பலரும் தங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்த தொடங்கினார்கள். டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போலவே தற்போது ஏசியும் ஒவ்வொரு வீடுகளையும் அடிப்படை வீட்டு உபயோக பொருளாக மாறி உள்ளது. பலரும் ஏசியில் இருந்து பழகிவிட்டதால் இரவில் தூங்கும் போது ஏசியை கட்டாயம் பயன்படுத்துகின்றனர். இதனால் ஏசி பயன்பாடு அதிகரித்தும் வருகிறது.

மத்திய அரசு புதிய திட்டம்!
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏசியில் குறிப்பிட்ட வெப்பநிலையை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தொடர்பான பரிசோதனையை இந்தியா விரைவில் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி ஏசியில் இனிமேல் வெப்பநிலையை 20°C முதல் 28°C வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு வர உள்ளது. "ஏர் கண்டிஷனிங் தரநிலைகள் குறித்து, விரைவில் ஒரு புதிய கட்டுப்பாடு வரவுள்ளது. வரும் காலங்களில் ஏசியில் 20°C முதல் 28°C வரை அமைக்க முடியும். இனி 20°C க்கு கீழே மாற்றவோ அல்லது 28°C க்கு மேலே வைக்கவோ முடியாது" என்று அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
#WATCH | Delhi: Union Minister of Housing & Urban Affairs, Manohar Lal Khattar says, "Regarding air conditioning standards, a new provision is being implemented soon. The temperature standardization for ACs will be set between 20°C to 28°C, meaning we won't be able to cool below… pic.twitter.com/Iwnaa4ZPKN
— ANI (@ANI) June 10, 2025
பொதுவாக ஏசி பயன்படுத்தும் போது அறையின் வெப்பநிலை 20°C முதல் 22°C வரை இருக்கும். ஒருசில நேரங்களில் இது 24–26°C கூட இருக்கும். இந்தியா போன்ற நாடுகளில் ஏசியை 24°C முதல் 26°C வரை வைத்து பராமரித்தாலே அறையின் வெப்பநிலை மிதமானதாக இருக்கும். இந்நிலையில் இனி 20°C கம்மியாக பயன்படுத்த முடியாது என்ற விதியை அரசு கொண்டு வர உள்ளது. தற்போது ஏசியில் 16°C வரை மாற்றி அமைக்க முடியும். அதிக மின்சார பயன்பாட்டை தவிர்க்கவும் , ஸ்மார்ட் எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த திட்டத்தை அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ