)
Additional Pension For State Government Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் அவ்வப்போது ஓய்வூதியதாரர்களுக்கு பல வித அறிவிப்புகளை வெளியிடுகின்றன. குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
- ஓய்வூதியதாரர்களுக்காக மாநில அரசாங்கம் மிகப் பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு, ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது.
- சத்தீஸ்கர் மாநிலத்தின் மூத்த ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக சத்தீஸ்கர் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
- இனி, 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் தற்போதைய ஓய்வூதியத்துடன் கூடுதலாக கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும்.
- இந்த கூடுதல் ஓய்வூதியம் 20% முதல் 100% வரை இருக்கக்கூடும்.
- இது ஓய்வூதியதாரர்களின் வயதுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத் தொகை அதிகரிக்கும்
சத்தீஸ்கர் அரசு மாநிலத்தின் அனைத்து மூத்த குடிமக்களின் நலனுக்காக இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின் கீழ், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும். இது அவர்களுக்கு வயதான காலத்தில் ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிக்க உதவும்.
இந்த அறிவிப்பிற்குப் பிறகு, நிதித்துறை அனைத்து ஓய்வூதிய விநியோக அதிகாரிகளையும் வங்கிகளையும் இந்த முடிவைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவு மாநிலத்தின் லட்சக்கணக்கான முதியோர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசாங்கத்தின் இந்த முடிவின் கீழ், தற்போதைய ஓய்வூதியத் தொகை 20 முதல் 100 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது.
- 80 முதல் 85 வயதுடைய மூத்த ஓய்வூதியதாரர்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை பெறுவார்கள்.
- 85 முதல் 90 வயதுடைய ஓய்வூதியதாரர்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீத கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள்.
- 90 முதல் 95 வயதுடைய மூத்த ஓய்வூதியதாரர்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீத கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள்.
- 95 முதல் 100 வயதுடைய ஓய்வூதியதாரர்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 50கூடுதல் ஓய்வூதியத்தை பெறுவார்கள்.
- 100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் 100 சதவீதம் அதிகரிக்கும்.
கூடுதல் ஓய்வூதியத் தொகை பற்றிய முக்கியமான விஷயம்
- கூடுதல் ஓய்வூதியம் கருணைக் கொடுப்பனவாக அளிக்கப்படுகின்றது.
- அரசாங்கத்தின் இந்த முடிவு, ஓய்வூதியதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெறும் ஓய்வூதியம் என இரண்டுக்கும் பொருந்தும்.
- இதற்கான வினியோகம் குறித்த வழிகாட்டுதல்களையும் அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அளித்துள்ளது.
- உதாரணமாக, 1943 ஆம் ஆண்டு ஜனவரி 1 அல்லது 15 ஆம் தேதிகளில் ஒருவர் பிறந்திருந்தால், அவர்களின் ஓய்வூதியம் ஜனவரி 1, 2023 முதல் 20 சதவீதம் அதிகரிக்கப்படும்.
- அதாவது ஓய்வூதியதாரர்கள் 80 வயதை நிறைவு செய்த பிறகு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ