)
Latest Weather Updates In Tamil: கங்கை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கங்கை நதிக்கரைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் மற்றும் கங்கை நதியை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரகாஷியின் தாராலி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்புக்குப் பிறகு, தற்போது ஆகஸ்ட் 6, 2025 அன்று இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் கைலாஷ் மலையேற்றப் பாதையில் வெள்ளப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 400க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஐடிபிபி மற்றும் என்டிஆர்எஃப் குழுக்களால் மீட்கப்பட்டார்கள். சாமோலியில் உள்ள பிலவர் பள்ளத்தாக்கில் பெய்த கனமழை காரணமாக 150 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர். சிக்கித் தவித்தவர்களை வனத்துறை மீட்டுள்ளது.
முன்னதாக, உத்தரகண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையிலிருந்து நிவாரணம் கிடைப்பது சாத்தியமில்லை எனத் தெரிகிறது. ஏனென்றால்,. வானிலை ஆய்வு மையத்தின்படி, ஆகஸ்ட் 6 முதல் 9 வரை உத்தரகண்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும். இதில் உத்தரகாசி உட்பட ருத்ரபிரயாக், சாமோலி, பாகேஷ்வர், பித்தோராகர் மற்றும் உதம் சிங் போன்ற இடங்களும் அடங்கும்.
உத்தரகாண்டின் ஹரித்வாரிலும் கங்கை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, மேலும் அது அபாயக் குறியை நெருங்கிவிட்டது. அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வானிலை ஆய்வுத் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரகாண்டின் 11 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனவே அதன் தாக்கம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியின் நீர் மட்டத்திலும் உணரப்படுகிறது. நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அபாயக் குறியை நெருங்கும் நிலையில் உள்ளது.
இருப்பினும், அது இன்னும் அபாயக் குறியைத் தொடவில்லை. ஆனால் மழை பெய்யும் விதத்தை வைத்து பார்த்தால், இன்று அபாயக் குறியை நெருங்க வாய்ப்புள்ளது. தெஹ்ரி கர்வால் பகுதியும் கனமழை மற்றும் மேகமூட்டம் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் குப்பைகள் தேங்கி உள்ளதால், போக்குவரத்து வழி மூடப்பட்டுள்ளது.
கம்சாலி பிரிவில் மூன்று மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. ஜாதர் கம்சாலி மோட்டார் சாலை, உத்தர்காஷி லாம்லான், கம்சாலி தெல்வாரா மற்றும் கமத் அயர்கல் கட்டாரி மோட்டார் சாலை ஆகிய மூன்று மோட்டார் சாலைகளிலும் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் மரங்கள் மற்றும் கனரக கற்கள் விழுந்ததால் சாலை தடைபட்டுள்ளது.
உத்தரகண்ட் தவிர, இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை தொடர்கிறது. சிம்லா, காங்க்ரா மற்றும் மண்டியில் இருக்கும் ஆறுகள் நிரம்பி வழிகிறது. சிம்லாவின் ஜக்கு பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, சாலைகளில் மரங்கள் விழுந்தன. காங்க்ராவில் கனமழை காரணமாக, சக்காரி ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் வானிலை மையம், இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் மலைப்பாங்கான மற்றும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு வானிலை இதே நிலை நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையை எச்சரிக்கையாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- உத்தரகண்டில் ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 6 ஆகிய நாட்களில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.
- கின்னூரில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் வெள்ளத்தில் சிக்கினர்; ITBP மற்றும் NDRF மீட்பு நடவடிக்கை.
- உத்தரகண்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் புயலால் பாதிப்பு; பலர் உயிரிழப்பு மற்றும் பலர் காணவில்லை.
- ஹரித்வாரில் கங்கையின் நீர் மட்டம் எச்சரிக்கை நிலையை நோக்கி உயர்ந்து வருகிறது.
- ஹிமாச்சலின் சில பகுதிகளில் சாலையில் மரங்கள் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
- உத்தரகண்ட், ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர் மற்றும் வட இந்தியாவில் ஆற்றை சுற்றி மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை.
- வானிலை ஆய்வு மையம் ஆகஸ்ட் 6 முதல் 9 வரை தொடர்ந்தும் கன மழைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ