)
உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும், அதை தொடர்பு படுத்தி ஆன்மீக காரணங்களுடன் சமூக வலைத்தளங்களில் ஆராயப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்து முன்கூட்டியே கணிக்கப்பட்டதாக கூறி ஜோதிடர்களின் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இந்த விமான விபத்து தொடர்பாக ஜோதிடர் முனீஸ்வர சாஸ்ட்திரியும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், படைப்பு என்று ஒன்று ஏற்பட்டுவிட்டதால், பாவ புன்னியம் அதை பொறுத்து, அவரவர்களுக்கு சுகம், துக்கம் சம்பவிக்கிறது. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். எந்த காலத்தில், எந்த யுகத்தில் விபத்துக்கள் இல்லாமல் இருக்கிறது. எல்ல காலத்திலுமே விமத்துக்கள், மரணங்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய காலத்தில் மீடியாக்கல் அதிகமாக உள்ளதால், நமக்கு இதை பற்றி அதிகம் தெரிய வருகிறது.
மனிதனின் பேராசைகள் இந்த பேரழிவுக்கு ஒரு காரணம். ஒரு ஹால் என்று எடுத்துக்கொண்டால், அந்த இடத்தில் எத்தனை பேர் கலந்து கொள்ள முடியுமோ, அத்தனை பேர் தான் பங்கேற்க வேண்டும். அதை மீறும்போது, விபத்துக்கள், மரணங்கள் ஏற்படுகின்றன. மகாமகம், கும்பமேளா போன்ற இடங்களில் இப்படிதான் நடந்தன. சம்பந்தப்பட்ட நிர்வாகஸ்தர்கள் மக்களை ஒழுங்குமுறைப்படுத்துகிறார்கள். ஆனால் பொதுமக்கள் ஆகிய நாம் அதற்கு ஒத்துழைக்கிறோமா? எதற்கு எடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
தனிமனிதனின் கட்டுப்பாடுகள் குறைந்துள்ளது. பெரும்பாலான அழிவுகளை மனிதர்களே ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஜோதிடம் என்பது வழிகாட்டுதல் மட்டுமே. அதனை மனிதர்கள்தான் செயல்படுத்துகிறார்கள். ஒருவருக்கு ஜாதகம் மிகவும் மோசமாக இருந்தாலும், அவர்களின் ஒழுக்கம் அதனை மாற்றி அமைத்துவிடும். அதாவது உணவு முறை, சுத்தமான பழக்கவழக்கங்கள், பெரியவர்களை சார்ந்து இருப்பது உள்ளிட்டவைகள் இருந்தாலே ஜாதக விதியை மாற்றி அமைந்துவிடும்.
விமான விபத்து
விமான விபத்து போன்ற கும்பலான மரணங்களை ஈஸ்வர சங்கல்பமாக நினைக்க வேண்டும். இதில் யாரையும் குற்றம்சாட்டக்கூடாது. தனிமனித வாழ்க்கை போராட்டங்கள் என்பது வேறு, இது போன்ற குழுவாக கிளம்பி செல்வதை எல்லாம், இயற்கை நியதி என்று ஒப்புக்கொண்டு, நம்மிடமிருந்து பிரிந்து சென்ற ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டும். மேலும், விமான நிர்வாகஸ்தர்கள், விமானிகள் இனி கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதை அப்படி தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர இதை விமர்சிப்பது நல்லதல்ல.
இதனை விமர்சிக்க விமர்சிக்க மேலும் மேலும் துக்கங்கள் தான் வரும். இதை விமர்சிக்க அரசாங்கம் உள்ளது, விசாரணை கமிஷன் போடப்பட்டுள்ளது. அதனை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நடக்கக்கூடாது நடந்து விட்டது. அடுத்தது என்ன என்பதை பார்க்க வேண்டுமே தவிர, இறந்தவர்கள் அத்தனை பேரின் ஜாதகமும் ஒரே மாதிரியா? அத்தனை பேருக்கும் மரண திசையா? போன்ற கேள்விகள் எல்லாம், நமது புத்திக்கு அப்பாற்பட்ட விஷயமாகும்.
விமானத்தில் சென்ற அத்தனை பேருமே மனநிம்மதியுடன் சென்றிருப்பார்களா? எல்லாரும் பாசிட்டிவ் மைண்டுடன் சென்றிருந்தால், அந்த பயணம் நல்லபடியாக நடந்திருக்கும். இதை அனைத்தும் தாண்டி ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்றால், மனித உலகில் இவர்கள் பயணம் செய்யும்போது இறைவன் தீர்மானம் செய்துவிட்டார்.
ராகு காலத்தில் விமானம் கிளம்பியதுதான் விபத்துக்கு காரணம் என்று ஒருவர் கூறி இருந்தார். அது தவறு. 24 மணி நேரமும் நமக்கு ஆசிர்வதிக்கப்பட்ட தருணங்கள்தான். இறைவனுக்கு எந்த பாகுபாடும் இல்லை. இத்தனி பேர் இந்த தேதியில் பயணிக்கும்போது இப்படி ஆகவேண்டும் என்று ஏற்கனவே எழுதியாகிவிட்டது. விமானத்தில் பயணிக்க அனைவருமே முன்கூடியே ரிசர்வ் செய்தவர்கள் தான். அப்போது ஒவ்வொருவரும் ரிசர்வ் செய்யப்பட்ட நேரம் என்ன? இதெல்லாம் நம்மால் யூகிக்க முடியாது.
கடைசி நேரத்தில் விமானத்தை தவறவிட்ட பெண்
இது இயற்கை. இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு பாடமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஜாதகம், என்பதற்கு மேலே ஆசீர்வாத பலன்களும் உண்டு. இந்த விமானத்தை கடைசி நேரத்தில் ஒரு இளம்பெண் தவறவிட்டார். இந்த பெண் குழந்தையாக இருக்கும்போது பெரியவர்கள், சான்றோர்கள் என அனைவரின் ஆசீர்வாதத்தையும் பெற்றிருக்கிறார். அந்த ஆசீர்வாத பலன்கள் விமானத்தில் ஏறவிடாமல் தடுத்திருக்கிறது. இறைஅருள் அந்த பெண்ணுக்கு இருந்துள்ளது என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ