)
Ahmedabad Air India Plane Crash: கடந்த ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமான விபத்து ஏற்பட்ட நிலையில், விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அந்த வகையில், அறிக்கையின் மூலம் விபத்து ஏற்பட்டபோது விமானத்தின் 2 விமானிகள் பேசிக்கொண்ட உரையாடல் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இரண்டு என்ஜின்களும் திடீரென சக்தியை இழந்து குறித்து, விமானிகள் அமர்ந்திருக்கும் காக்பிட் பகுதியில் பதிவான உரையாடல் முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டுகிறது எனலாம்.
The preliminary #AAIBreport on the #AirIndiaAI171 crash revealed a chilling cockpit exchange: "Why did you cut off fuel?" as both engines' fuel switches inexplicably moved to 'Cutoff' before the fatal crash.#AhmedabadPlaneCrash
— Nomadic Nitin (@Niitz1) July 12, 2025
READ FULL REPORT HERE: https://t.co/5JOJvw0qNi
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏற் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஜூன் 12ஆம் தேதி இந்திய நேரப்படி 13:38:42 (மதியம் 1 மணி 38வது நிமிடம் 42வது வினாடி) அதன் அதிகபட்ச புறப்படும் வேகமான 180 Knots-ஐ எட்டியது. வான் வேகத்தைக் குறித்தபோது, இரண்டு எஞ்சின் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகளும் 'Run' என்ற நிலையில் இருந்து 'CutOff' நிலைக்கு மாறி உள்ளன.
அப்போதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் உரையாடல் நடந்துள்ளது. Cut Off நிலைக்கு மாறி உடன் ஒரு விமானி, "நீங்கள் ஏன் எரிபொருளை துண்டித்தீர்கள்?" என்று கேட்டார், மற்றவர், "நான் அவ்வாறு செய்யவில்லை" என்று பதிலளித்தார். விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டனாக சுமீத் சபர்வால் மற்றும் துணை கேப்டனாக கிளைவ் குந்தர் செயல்பட்டனர். இதில் யார் கேள்வி எழுப்பியது, யார் பதில அளித்தது என்பதை தெளிவாக தெரியவில்லை.
Cutoff நிலைக்கு ஆரம்பக்கட்டத்தில் சென்ற போது பத்து வினாடிகளுக்குப் பிறகு, 13:38:52 மணிக்கு, முதல் எஞ்சனின் (Engine 1) சுவிட்ச் 'ரன்' நிலைக்கு என்று திரும்பியது. பின்னர் நான்கு வினாடிகள் கழித்து, 13:38:56 மணிக்கு, இரண்டாவது எஞ்சனின் (Engine 2) சுவிட்சும் 'ரன்' நிலைக்கு என்று திரும்பியது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இரண்டு எஞ்சின்களுக்கும் எக்ஸாஸ்ட் கேஸ் வெப்பநிலை (EGT) அதிகரித்ததை எஞ்சின் மற்றும் விமான விமான ரெக்கார்டர் (EAFR) சுட்டிக்காட்டுகிறது. இது எஞ்சினை மீண்டும் இயக்க முயற்சித்ததை காட்டுகிறது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து இரண்டு என்ஜின்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுப்பாய்வுக்காக அவற்றைப் பாதுகாத்து வைத்ததாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனை மாணவர் விடுதியின் கட்டடத்தில் விமானம் மோதிய இடத்தில் ட்ரோன் மேப்பிங் நிறைவடைந்துள்ளது. மேலும் இடிபாடுகள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன. EAFR-இன் பின்புறம் கணிசமாக சேதமடைந்திருப்பாகவும், தரவு பதிவிறக்கத்தில் பிரச்னை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் 787-8 விமானம் அல்லது GE GEnx-1B எஞ்சின் ஆபரேட்டர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்காக எவ்வித பாதுகாப்பு பரிந்துரைகளையும் AAIB தற்போது வழங்கவில்லை. பல்வேறு தரப்பினரிடம் இருந்து இன்னும் கூடுதல் ஆதாரங்கள் திட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 26ஆம் தேதி அன்று அகமதாபாத் விமான விபத்து குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு நிலை அறிக்கையை வெளியிட்டது. சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களின் ஆழமான பகுப்பாய்வைத் தொடர்ந்து இறுதி AAIB அறிக்கை வெளியிடப்படும் என அதில் தெரிவித்திருந்தது.
அகமதாபாத் விமான விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் சென்ற 241 பேரும், மருத்துவமனை வளாகத்தில் 19 பேரும் உயிரிழந்தனர். விமானத்தில் ஒரே ஒருவர் மட்டும் உயிர்பிழைத்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ