)
இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே, ஜூன் 12 அன்று, நடந்த ஒரு பயங்கரமான விமான விபத்து, நாட்டையும் உலுக்கியுள்ளது. லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா விமானம் AI-171, புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும் இறந்தனர். இது தவிர, விமானம் டாக்டர்கள் மருத்துவர்களுக்கான விடுதியின் மீது விழுந்ததால் அதில் இருந்த சிலரும் உயிர் இழந்தனர்.
வாட்டை உலுக்கிய இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா ரூ. 1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த இழப்பீடு ஆரம்ப உதவி மட்டுமே. இந்த காப்பீட்டு தொகை ரூ.1000 கோடி வரை எட்டக்கூடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உண்மையான இழப்பீடு 2009ம் ஆண்டு இந்தியா ஏற்றுக்கொண்ட மாண்ட்ரீல் மாநாடு விதிமுறையின் கீழ் முடிவு செய்யப்படும்.
மாண்ட்ரீல் மாநாடு என்றால் என்ன?
மாண்ட்ரீல் மாநாடு என்பது ஒரு சர்வதேச விதி. இதன் கீழ் விமான விபத்துகளில் இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. விமான விபத்தில் பயணியின் மரணம் அல்லது காயத்திற்கு விமான நிறுவனம் 1,28,821 (SDR) வரை இழப்பீடு வழங்க வேண்டும். அக்டோபர் 2024 நிலவரப்படி, 1 SDR இன் மதிப்பு $1.33 (சுமார் ரூ.111) ஆகும். அதாவது, ஒவ்வொரு பயணிக்கும் ரூ.1.43 கோடி வரை இழப்பீடு கிடைக்கும். விமான நிறுவனத்தின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டால், இழப்பீடு மேலும் அதிகரிக்கும்.
விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர்?
அகமதாபாத் விமான விபத்து (Ahmedabad Plane Crash) நடந்த நேரத்தில், விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இதில் 169 இந்திய குடிமக்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், 1 கனடியன் மற்றும் 7 போர்த்துகீசிய குடிமக்கள் அடங்குவர். இந்த விபத்தில் அதிசயமாக உயிர் பிழைத்த ஒருவர் தவிர அனைவரும் உயிரிழந்தனர்.
விமான காப்பீடு விபரம்
ஏர் இந்தியா தனது விமானக் குழு முழுவதையும் உலகளாவிய $20 பில்லியன் விமான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துள்ளது. அதில் கீழ்கண்ட காப்பீடுகள் அடங்கும்.
விமானக் காப்பீடு (Hull insurance): விமானத்திற்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பை ஈடுகட்டுகிறது. இது விமான நிறுவனத்திற்கு கிடைக்கும்.
பயணிகள் பொறுப்பு காப்பீடு (Passenger liability insurance): பயணிகளால் அல்லது அவர்களின் சார்பாக செய்யப்படும் சட்டப்பூர்வ உரிமைகோரல்களிலிருந்து விமான நிறுவனத்தைப் பாதுகாக்கிறது.
மூன்றாம் தரப்பு பொறுப்பு (Third-party liability): மருத்துவர்களின் விடுதியில் உயிர் இழப்பு போன்ற நிலத்தில் ஏற்படும் காயம் அல்லது சொத்து சேதத்தை ஈடு செய்யும் காப்பீடு.
சரக்கு மற்றும் பணியாளர் காப்பீடு (Cargo and crew cover): விமானத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் விமான ஊழியர்களை உள்ளடக்கிய காப்பீடு.
விபத்துக்குள்ளான விமானத்தின் விலை $211 மில்லியன் முதல் $280 மில்லியன் வரை இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த 2013 மாடல் விமானத்தின் (VT-ABN) காப்பீட்டு மதிப்பு 2021ம் ஆண்டில் $115 மில்லியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இழப்பீடு எங்கிருந்து வரும்?
ஏர் இந்தியாவின் காப்பீடு பல சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டின் பொறுப்பு ஒரு நிறுவனத்தின் பொறுப்பு அல்ல, ஆனால் 1.5% முதல் 15% வரை பல நிறுவனங்களிடையே பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பெரிய விபத்தின் பொருளாதார தாக்கம் உலகம் முழுவதும் உள்ள காப்பீட்டு நிறுவனங்களில் இருக்கும்.
மொத்த இழப்பீடு எவ்வளவு?
விமானத்தின் இழப்பைத் தவிர, பயணிகள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் இழப்பீடாக மிகப்பெரிய செலவு இருக்கும். மொத்த இழப்பீடு ரூ.1,000 கோடி வரை உயரலாம். இது இந்திய விமான வரலாற்றில் மிகப் பெரிய அளவில் நிதி இழப்பை ஏற்படுத்திய விபத்துகளில் ஒன்றாக இருக்கலாம்.
இழப்பீடு எவ்வாறு தீர்மானிக்கப்படும்?
ஒவ்வொரு பயணிக்கும் இழப்பீடு வேறுபட்டிருக்கலாம். இறந்தவரின் வயது, வேலை, வருமானம், குடும்ப நிலை மற்றும் சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்படுகிறது. இந்த விபத்து இந்திய விமானப் போக்குவரத்தின் ஒரு சோகமான அத்தியாயம் மட்டுமல்ல, காப்பீடு மற்றும் சட்டப் பொறுப்புகளின் பார்வையில் இருந்து ஒரு பெரிய பிரச்சினையாகும். வரவிருக்கும் காலங்களில், இந்த வழக்கு விமானப் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு வழிகாட்டுதல்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகவும் கடுமையானதாக மாற்றுவதை நோக்கிச் செல்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ